கடந்த ஜனவரி 25ஆம் தேதி அன்று நடிகர் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியானது. அதை நாளில் இப்படத்திற்கு போட்டியாக ஆர்.ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் வெளியானது. தொடர்ச்சியாக காதல் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அசோக் செல்வன் தற்பொழுது ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த படங்களிலும் நடித்த வருகிறார். அதுவும் அசோக் செல்வன் தன் மனைவியுடன் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகவும் ப்ளூ ஸ்டார் திரைப்படம் திகழ்கிறது மேலும் ஒரு படத்தில் அசோக்செல்வன் இருக்கிறார் என்றால் நிச்சயமாக நமக்கு நல்ல ஒரு என்டர்டைன்மென்ட்டான படமாக இருக்கும் என்று மக்கள் பரவலாக நம்பும் அளவிற்கு அசோக் செல்வன் தற்போது தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துவரும் படங்களும் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அப்படி அவர் நடித்த எல்கேஜி ஆகட்டும் அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்டுல விஷேஷம் திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு குடும்ப ஆடியன்சை கவரும் வகையிலும் இருந்தது.
இப்படி இரண்டு பிரபலமான நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் திரையரங்குகளில் வந்துள்ளது எந்த படத்திற்கு செல்வது என்று குழப்பத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பிரமோஷனில் முன்னணி நடிகர்கள் அனைவருமே கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் அதே சமயத்தில் தற்போது பல youtube சேனலுக்கு இரு திரைப்படத்தின் நடிகை நடிகர்களும் பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால் யூட்யூப் பக்கம் சென்றாலே ஆர் ஜே பாலாஜி மற்றும் அசோக் செல்வனின் முகங்கள் தான் பெருமளவில் காண்பிக்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு படம் வெளியாகப் போகிறது என்றால் அது குறித்த அறிவிப்பை படக்குழு அபிஷியல் ஆக வெளியிட்ட பிறகு படம் வெளியானதை ஒட்டி படத்தில் நடித்த பிரபலங்கள் பத்திரிக்கை நிறுவனங்களுக்கும் youtube சேனலுக்கும் பேட்டி கொடுப்பதன் மூலம் படத்தைப் பற்றிய அதிக புரிதல் மக்களுக்கு கொண்டு வரவும் படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விளம்பரங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்று! இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் ஆக இரண்டு திரைப்படங்களுமே தற்பொழுது வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியான அதே நாளில் தூக்குதுரை என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த படத்தை குறித்த அறிவிப்புகளும் விளம்பரங்களும் பெருமளவில் வெளியில் வரவில்லை! அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இனியா மற்றும் யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்திருந்த போதிலும் இந்த படத்தை குறித்த விளம்பரங்களும் இப்படி ஒரு படம் 25ஆம் தேதி ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் பொழுது திரையிடப்படுகிறது என்று ஒரு தகவலும் மக்களுக்கு தெரியவில்லை! இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபலங்கள் மற்ற வேலைகளில் பிஸியாக இருந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என்று தூக்குதுரை படத்தின் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறியுள்ளார். தூக்குதுரை படம் இவருக்கு இரண்டாவது திரைப்படமாகும். மேலும் திரையரங்குகளின் முன்பு ரிவ்யூ ஒருத்தர் செய்திருந்தார் அந்த ரிவியூவில் கூட இந்த வாரத்தில் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி உள்ளதாக கூறியுள்ளார் அந்த வீடியோ கிளிப்பும் என்னிடம் உள்ளது! ஆஜே பாலாஜி எல்லாம் தன் படத்திற்காக அதிக பிரமோஷன் செய்கிறார். Youtube சேனல் பக்கம் சென்றாலே அவரது முகம் தான் இருக்கிறது இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவை கூட யோகி பாபு அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்!