நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணிகளும் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சாப் அணி மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டியில் சென்னை அணியை சென்னை கோட்டையில் மண்ணை கவ்வவைத்தது பஞ்சாப் அணி. அப்போது இணையத்தில் பஞ்சாப் அணி போட்ட மீம்ஸ் வைரலான நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கோட்டைக்கு சென்று தரமான பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஷ் அணியை அவர்களது சொந்த மண்ணான சேப்பாக்கில் வைத்து சம்பவம் செய்தது பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி, அப்போது பஞ்சாப் தனது இணையதள பக்கத்தில் சோலி முடிஞ்சது என்று மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் வசனத்தை கொண்டு மீம்ஸ் ஒன்றை பதிவிட்டது அதனை தொடர்ந்து மீண்டும், நாங்கள் டேபிளில் முன்னேற காரணமே தல தான் என பதிவிட்டது இது மஞ்சள் பான்ஸுக்கு கொஞ்சம் கோவத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மீண்டும் நேற்று தர்மசாலா மைதானத்தில் இரு அணிகளும் மோதியது, வழக்கம் போல் சிஎஸ்கே கேப்டன் டாஸ் தோற்ற கையோடு மைதானத்திற்கு பேட்டை எடுத்து கொண்டு வந்தார். முதலில் இறங்கிய ருதுராஜ் மற்றும் ரஹானே அதிக ரன்களை அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ரஹானே வந்த வேகத்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த மிடச்செல் ரன்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தார். ஆனாலும், LBW Umbire கால் கொடுத்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் நிதானமாக ஆடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் ஆட்டமிழக்க ஜடேஜா மட்டுமே அதிக ரன்களை குவித்தார் சென்னை அணியில், தல தொனியில் ஆட்டத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார் தோனி. இதனை கண்டு மகிழ்ச்சியான பஞ்சாப் அணியின் பிரீத்தி சிந்தா மற்றும் ரசிகர்களை சைலண்டாக்கியது சென்னை அணி.
முதல் இன்னிங்கில் 20 ஓவர் முடிவில் 167 ரன்களை குவித்தது சென்னை அணி, இரண்டாவது ஆட்டத்திற்கு களம் இறங்கிய பஞ்சாப் ஆணி வீரர்கள் சிஎஸ்கே வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொடுத்து வந்தனர். 20 ஓவர் முடிவில் 139 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது பஞ்சாப் அணி இந்த தோல்வி மூலம் பஞ்சாப் அணி 8வது இடத்திற்கு சென்றது. மேலும், சென்னை அணி நேரடியாக மூன்றாவது இடத்திற்கு சென்றது. ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வானர் பேட்டிங் மட்டுமின்றி பௌலிங்கிலும் மூன்று விக்கெட் எடுத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளினார்.
போட்டியில் வென்ற பிறகு கடந்த போட்டியில் சென்னையை கலாய்த்த பஞ்சாப் அணிக்கு டன் அண்ட் டஸ்ட் என்ற ஹாஸ்டேக்கை வைரல் செய்தனர். சிஎஸ்கே ரசிகர்கள் தான் காலயிக்கிறார்கள் என்றால் சிஎஸ்கே நிர்வாகமும் தனது இணையதள பக்கத்தில் மீம்ஸ் போட்டு பங்கம் செய்துள்ளது. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கும் சென்னை அணி பிளே ஆப் செல்வதற்க்கான வாய்ப்பை உறுதி செய்து வைத்திருக்கிறது. நேற்று இரவு கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடியது அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா அணி இதுவரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.