சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளி திரையில் சாதனை படைத்து வருபவர்கள் தற்போது முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். இவர் ஊடகத்துறைகள் இருந்த ஆர்வத்தினால் முதலில் தனது நண்பர்கள் மூலமாக ஷார்ட் பிலிம் நடித்து பிறகு முறையாக நடிப்பை கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி எடுத்துள்ளார் அதற்குப் பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சீரியல் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய கவின் 2011 ஆம் ஆண்டு வெளியான கனா காணும் காலங்களில் நடித்து நல்ல அறிமுகம் பெற்றார். இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற பிரபல தொடரில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கையும் குடும்பங்கள் கொண்டாடும் சின்னத்திரை நடிகராக வலம் வந்தார். இந்த சீரியல் மூலம் கவின் அடைந்த வெற்றியை தொடர்ந்து சத்ரியன் என்னும் படத்தில் 2017 ஆம் ஆண்டு துணை கதாபாத்திரத்தின் நடித்து திரையிலும் அறிமுகமானார் அதற்கு பிறகு நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றார்.
இதற்குப் பிறகு பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட கவின் பல விமர்சனங்களையும் அதைவிட அதிகமான வரவேற்புகளையும் ரசிகர் கூட்டத்தையும் பெற்றார். ஏனென்றால் அந்த போட்டியில் கவீனுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகள் அதில் வெளிவர முயற்சி செய்த அனைத்துமே காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்தது. அதோடு இறுதியாக அந்த போட்டியில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்த கவின் விஜய் டிவிக்கும் அவரது சுற்றப்பட்டாராம் அனைத்திற்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தார் ஏன் பிக் பாஸில் ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் கவின் தொடர்ந்து இருந்தால் அவரே நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பார் என்பது பலரின் கருத்தாகவும் இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முற்றிலும் தனது சினிமா பயணத்தில் கவனம் செலுத்திய கவின் லிப் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. அதனை தொடர்ந்து டாடா என்னும் திரைப்படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் கவினின் நடிப்பு மிகவும் நேர்த்தியாகவும் தத்ரூபமாகவும் இருந்ததால் கவினின் திரைப்பட பயணத்திற்கு இந்த படம் நல்ல ஒரு வரவேற்பையும் திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் ஸ்டார் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அதனால் அதற்கான பிரமோஷனை பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்து செய்து வருகிறார்.
அதோடு சமீபத்தில் தான் பயின்ற கல்லூரிக்கு சென்று நினைவுகளை மீட்டெடுத்துள்ளதாக அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார், அதோடு பெரியார் ஈவேராவின் சிலைக்கு அருகில் நின்றும் புகைப்படம் எடுத்து அதனையும் பதிவிட்டுள்ளார். இது தற்போது பெருமளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனென்றால் ஈவேரா பெரியாரின் கருத்துக்களை தாங்கி கூறி வந்த சில சினிமா பிரபலங்களான சூர்யா மற்றும் ஜோதிகா போன்றோர் தற்போது படு விமர்சனத்திற்கும் சமூக வலைதளங்களில் பேசுபொருளுக்கும் உள்ளாகி வருகிற நிலையில் கவினும் ஈவேராவிற்கு அருகில் நின்று புகைப்படத்தை எடுத்து பதிவிட்டி இவரும் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்! அதனால் கவின் ஈவேராவின் கூட்டமா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் தற்போது சினிமாவில் தனது தொடக்க பயணத்தை தொடங்கி வரும் கவின் இது போன்ற சில அரசியல் சார்ந்த விஷயங்களில் மறைமுகமாக சூர்யா ஜோதிகா முன்பு செய்ததை போன்று தற்போது செய்துள்ளது அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.