24 special

தத்தளிக்கும் சென்னை....அண்ணாமலைக்கு போன் அடித்த டெல்லி தலைமை! என்ன விஷயம் சொன்னாங்க தெரியுமா?

JP Nadda, Annamalai
JP Nadda, Annamalai

சென்னையில் நேற்று முதல் மழை விடாமல் பொலிந்து வரும் நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவசரமாக அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் நிலவி வரும் புயல் குறித்து கேட்டறிந்து பாஜக சார்பில் நிவாரண உதவிகளை தீவிரமாக செய்லபட உத்தரவிட்டு தமிழக பாஜகவினருக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளாராம்.


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்ச்சி நேற்று புயலாக மாறி சென்னையில் இருந்து ஆந்திரா கடற் பகுதியில் கரையை கடக்கும் என தெரிவித்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று உருவான புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலத்திற்கும் செல்லும் ரயில் சேவைகள், பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பலரது குடியிருப்பு பகுதிகளுக்கு மழைநீர் சூழ்ந்து உள்ளது. மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் அத்யவாசத்தை தவிர்த்து வெளியில் வர வேண்டாம் எனவும் மின்சார கம்பிகள் அறுந்து கிடைப்பதால் யுயிர் சேதம் வாய்ப்புள்ளதால் பாதுகாப்பான இடத்தில இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. நேற்று இரவு முழுவதும் பெய்து வருவதால் இதுவரை இல்லாத அளவிற்கு சென்னையில் 36 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை இன்று இரவு வரை பெய்யக்கூடம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புயல் பாதிப்பு விஷயங்களை அவரிடம் கேட்டறிந்தார். அதோடு பாஜக சார்பில் உதவிகள் செய்வதாக அவர் உறுதியளித்ததோடு, தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் புயல் பாதிப்புள்ள பகுதிகளில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்.  இதனை அண்ணாமலை உறுதி செய்துள்ளார். 

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா என்னை தொடர்பு பேசி பேசினார். சென்னை உள்பட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். அவருக்கு நன்றி. அதோடு அண்டை மாநில பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்குவதாக உறுதியளித்தார். அதோடு மாநகராட்சி, மாநில அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்களுடன் சேர்ந்து பாஜகவினர் உதவவும் அறிவுரை வழங்கினார்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு பாஜக சார்பில் மக்களுக்கு உணவு வழங்குதல், அவசர உதவி தொலைபேசி எண்கள் அறிவித்துள்ளது. தமிழக அரசு மக்களுக்கு என்ன செய்கிறது என்று தெரியாமல் இருக்கும்போது பாஜக சார்பில் நிவாரண பொருட்கள், மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது