நாடு முழுவதும் 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு இறங்கு முகத்தையும் பாஜகவிற்கு ஏறு முகத்தையும் கொடுத்துள்ளது, தொடர்ச்சியாக 4 மாநிலங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது, கோவாவில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக ஆட்சி அமைக்கிறது பாஜக, உத்திர பிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக.
இது பாஜகவிற்கு எதிர் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, 2024-ம் ஆண்டிலும் மோடியே மீண்டும் பிரதமராக வெற்றி பெறுவார் என்பதே இந்த மக்கள் தீர்ப்புகள் மூலம் உறுதியாகி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், இது ஒருபுறம் என்றால் வேண்டாத வேலையில் சிக்கி இருப்பதாக திமுக தலைமை நினைக்கிறது.
ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்னயிக் போன்றவர்கள் வழியில் பாஜக எதிர்ப்பு அரசியல் செய்யாமல் அமைதியாக இருந்து இருக்கலாம் இனி தான் பாஜக அரசிலே ஆரம்பமாக போகிறது என திமுக தலைமைக்கு முக்கியமான இருவர் அறிவுரை தொடங்கிட்டுள்ளனர், இதுவரை நதி நீர் விவகாரம் இரு மாநில எல்லை பிரச்சனை போன்றவற்றின் மூலம் மாநில அரசுகளே ஆதாயமடைந்த நிலையில் அதே வழியை பாஜக கையில் எடுக்க இருக்கிறதாம்.
குறிப்பாக முல்லை பெரியாறு அணை விவகாரம் இன்னும் ஓரிரு மாதங்களில் விஸ்வரூபம் எடுக்கும் நிலை உண்டாகி இருக்கிறதாம் முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்காக சென்ற தமிழக வாகனத்தை கேரள அரசு அனுமதிக்கவில்லை, இந்த நிலையில் கேரளாவில் தமிழர்களின் உரிமையை திமுக அரசு கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்த்து தாரை வார்த்து இருப்பதாக பாஜக மிக பெரியளவில் போராட்டம் நடத்த இருக்கிறதாம்.
இது நிச்சயம் திமுகவிற்கு மிக பெரிய எதிர்ப்பை விவசாயிகள் மத்தியிலும், மாநில உரிமையை பேசுபவர்கள் மத்தியிலும் உண்டாக்கும் என்று பாஜக கருதுகிறது, இந்த விவகாரம் ஸ்டாலினுக்கும் சொல்ல பட்டு இருக்கிறது, தேவையில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் வைத்து 4 எம்பி பதவிகளையும் பணத்தையும் கொடுத்தது தான் மிச்சம் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு என்பதே இல்லை.
இப்போது அவர்கள் மூலம் மாநில உரிமைக்கும் பிரச்சனை வரும் என்றால் 2024-ம் ஆண்டிற்குள் கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றவும் திமுக முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை விரைவில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிரடியாக களம் இறங்கி முல்லை பெரியாறு அணையை நோக்கி சென்றாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.