எதற்கும் துணைந்தவன் திரைப்படத்தை நான் சூர்யாவை மனதில் வைத்து எழுதவில்லை எனவும், வேறு நடிகர் ஒருவரை மனதில் வைத்து எழுதினேன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்புதான் இந்த படத்தில் சூர்யா நடிக்கவேண்டும் என கூறினார், அதனை நான் சூர்யாவிடம் தெரிவிக்க சரி என சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டார் என்று பாண்டியராஜன் தெரிவித்தார்.
அத்துடன் நான் சூர்யாவிற்கு முதலில் வேறு கதை ஒன்றை குறிப்பிட்டேன் அது பட்ஜெட் அதிகம் அதனை கலாநிதி மாறன் மறுக்கவே இந்த படத்தை எடுத்ததாக குறிப்பிட்டார் பாண்டியராஜன், அத்துடன் வேண்டும் என்றே திரைக்கதையில் பொள்ளாச்சி விவகாரத்தை மையப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டதாகவும் குற்றசாட்டுகள் இப்போது கூறப்படுகிறது.
மேலும் நீதிபதி தீர்ப்பு வழங்கும் பல காட்சிகள் படத்தில் வெட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது, முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் இருக்க கடைசி கட்டத்தில் பல காட்சிகளை பட குழு திரைப்படத்தில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெறாத நிலையில் இப்போது பட குழு ஒருவரை மாற்றி ஒருவர் தரப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்களாம், சூர்யாவின் அரசியல் பேச்சே திரைப்படம் வட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியாகமல் இருக்க காரணமாக பார்க்க படுவதாக ஒரு தரப்பும்.,
இல்லை இல்லை திரைக்கதைதான் தவறு என ஒரு தரப்பும் மாறி மாறி பேசி வருகிறார்களாம், இந்த சூழலில் திட்டமிட்டு கதையை தேர்வு செய்ததும், அதில் மத்திய அமைச்சர் என காட்சியை அமைத்ததும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது, இந்த சூழலில் தற்போது ஏன் கலாநிதி மாறன் தேர்வு செய்த கதையில் சூர்யா நடித்தார், உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
திட்டமிட்டு சூர்யா கதையை தேர்வு செய்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக ப்ரொபோகண்டா செய்வதாக குற்றசாட்டுகள் அதிகரித்து வரும் சூழலில் பாண்டியராஜன் தான் சூர்யாவிற்கு தெரிவித்த கதையே வேறு, எதற்கும் துணிந்தவன் கதையை தேர்வு செய்தது கலாநிதி மாறன்தான் என்று பேசியிருப்பது சூர்யாவிற்கு மீண்டும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.