World

பயன்பாட்டில் இல்லாத ட்விட்டரில் சீனா சித்து இந்திய ராணுவம் உஷார் !

Afghan - India - Twitter issue.
Afghan - India - Twitter issue.

சீனாவில் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டரில் சீன ராணுவம் தரப்பில் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பரப்பி, சீன எல்லையில் காவலில் இருக்கும் இராணுவ வீரர்களை சீனா திசை திருப்ப முயற்சி செய்து வரும் நிலையில் இந்திய இராணுவம் உஷார் செய்யபட்டு உள்ளது.


அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சமீபத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது அதில் சீன எல்லையை ஒட்டிய நமது நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவை சேர்ந்த ராணுவத்தினர் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி உள்ளதாக தெரிவித்தது.இதையடுத்து எல்லையில் நம் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் அருணாச்சல பிரதேச எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சீன ராணுவம் பெயரில் உள்ள, 'டுவிட்டர்' சமூக வலைதளங்கள் வாயிலாக திட்டமிட்டு பரப்பபடுகின்றன.சீனாவில், 'டுவிட்டர்'  பொது மக்கள் பயன்பாட்டில் இல்லாதபோது வெளி உலகிற்கு தன்னை அடையாள படுத்தவும், அந்நாட்டு ராணுவத்தின் பெயரில் இவை பகிரப்பட்டு வருகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த பதிவுகளை நமது ராணுவ புலனாய்வு துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அருணாச்சல பிரதேசம், லடாக் எல்லையில் நம் வீரர்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனா வெளி உலகில் மிகுந்த சக்தி வாய்ந்த இராணுவம் தன்னிடம் உள்ளதாக நிலை நாட்டி கொள்ளவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் எல்லையில் நமது இராணுவம் விழிப்புடனும், இராணுவ வீரர்கள் வலிமையாக இருப்பதால், நிச்சயம் சீனாவை கால்வான் வேலி சம்பவம் போன்று விரட்டி அடிக்கவும் நமது இராணுவம் தயங்காது என முன்னாள் இராணுவ வீரர்கள் உறுதியாக அடித்து கூறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆராய நம் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தை பாகிஸ்தான் மற்றும் சீனா இரு நாடுகளும் புறக்கணித்து இருப்பதும் உலக அளவில்  சீனா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் நோக்கத்தை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது.