அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன, இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்ன பேசினார்கள் என கூறப்படுவது பற்றி பார்க்கலாம்.
தமிழக பாஜக சார்பில் முல்லை பெரியாறு அணையில் தண்ணீரை திறந்து விட்டு கேரள அரசாங்கத்திடம் சரணடைந்து விட்டதாகவும், தமிழக விவசாயிகள் எதிர்காலத்தில் திமுக அரசாங்கம் அரசியல் செய்வதாகவும் கூறி தேனி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கபட்டது.
இதில் பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், விவசாய அணி தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இதில் பேசிய அண்ணாமலை தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.நான் கேட்பது ஒன்றுதான் கேரள அமைச்சருக்கு மதகை திறக்க அனுமதி கொடுத்தது யார்? தமிழக அரசு கொடுத்தது என்றால் ஏன் நமது தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் அணைக்கு செல்லவில்லை, தமிழக அரசிற்கு தெரியாது என்றால் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு துணை பிரதமர் ஆகலாம் அடுத்த முறை கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை பெற ஸ்டாலின் திட்டமிடுகிறார் அவரது மகனை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க மாநில உரிமையை தமிழக முதல்வர் ஸ்டாலின் விட்டு கொடுக்கிறார் என்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அண்ணாமலை.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு காரில் ஏறிய அண்ணாமலை நேராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை சந்தித்தார்,
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் வீட்டில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன், மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாவட்ட பாஜக தலைவர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது அனைவரும் நலம் விசாரித்து கொண்டனர் அப்போது முல்லைப்பெரியாறு அணையை தான் ஆய்வு செய்த படத்தை பன்னீர்செல்வம் அண்ணாமலையிடம் காட்டினார் இருவரும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து பேசிய பின்பு 10 நிமிடம் தனியாக பேசினர். அதிமுகவில் உட்கட்சி விவகாரத்தில் நடைபெறும் உள்ளடி வேலைகள் குறித்து ம், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் குறிப்பாக அரசியல் நிலைப்பாடு என்ற ஒன்று இல்லாமல் செய்த செயல்களால் தேர்தலில் தோல்வி அடைந்தோம் இப்போதும் அதே நிலை நீள்கிறது என ஒ.பன்னீர்செல்வம் அண்ணாமலையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அண்ணாமலை பன்னீர் செல்வத்தை சந்திக்கும் முந்தைய தினம் டெல்லி சென்று இருந்ததும் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோரை சந்தித்துவிட்டு திரும்பி நிலையில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை தனியே சந்தித்து பேசியது முக்கியத்துவம் உடையதாக பார்க்கப்படுகிறது.