24 special

மீண்டும் சீரிய சின்மயி....

chinmayi, raju
chinmayi, raju

சமூக வலைதளத்தில் தற்பொழுது அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜு 2017 ஆண்டில் அதிமுக எம்பி எம்எல்ஏக்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்ட போது அதிமுக எம்எல்ஏக்கள் பெண்களைக் கேட்டதாகவும் அதற்கான ஏற்பாடுகளை கருணாஸ் செய்து கொடுத்ததாகவும் அதற்கான அனைத்து செலவுகளையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்தார் வேறு யார் செய்வார் என்று பேட்டியில் கூறியது தற்போது இணையத்தில் பெரும் வைரலானது ஏனென்றால் அந்த காலகட்டத்திலே தனியார் விடுதியில் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோக்கள் அனைத்தும் வைரலாகியது. தற்பொழுது அங்கு நடந்தவற்றையும் அங்குள்ள எம்எல்ஏ எம்பிகள் பெண்களை கேட்டதையும் அதிமுக நிர்வாகியாளராக தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தையும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏனென்றால் அதிமுக நிர்வாகி ராஜு இது குறித்து பேசும் பொழுது நடிகை திரிஷாவின் பெயரை பயன்படுத்தினார். அதனால் த்ரிஷா தரப்பில் இருந்து சினிமா வட்டாரங்களில் ராஜுவிற்கு எதிர்ப்புகளும் த்ரிஷாவிற்கு ஆதரவுகளும் பெறுகிறது இதனை அடுத்து நடிகரும் இயக்குனருமான சேரன் திரையுலகை சேர்ந்த ஒருவரை இப்படி பேசுவது மிகவும் தவறானது இதற்கு காவல்துறையும் நடிகர் சங்கமும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். 


இதனை அடுத்து அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜு நான் த்ரிஷாவை இதில் சம்பந்தப்பட்டதாக கூறவில்லை திரிஷா போன்ற பெண் வேண்டுமென்று அதிமுக நிர்வாகி கூறியதாகவே தெரிவித்தேன் என்று கூறி இதற்கு மன்னிப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக பெண்களை குறித்த கருத்துக்கள் மற்றும் பெண்கள் அவமதிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் வலம் வருவதும் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் உள்ள பெண்கள் ஆதாரம் இன்றி அடிக்கடி இதுபோன்ற விமர்சனங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கண்டனங்களில் தெரிவித்து வரும் பிரபல பாடகி சின்மை இதற்கும் தனது கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மீ டூ மூவ்மெண்ட் இந்தியால 2018 ல நடந்தப்ப, “போகுற போக்குல என்னத்த வேணா சொல்லுவியா?” - அப்படீன்னு கேட்ட கேவலமான பிறவிங்கதான் இங்க. கலாசாரம் பெண்ணியம் சமூக நீதின்னு பேச்சு மட்டும் வாய் கிழியுமே தவிற தமிழ் நாட்டு அரசியல்வாதிங்க பெண்கள பத்தி எப்படி பேசுறாங்கன்னு translate பண்ணி உலகதுக்கு காட்டணும். நாறிடும். 

ஊருக்கே தெரிஞ்ச பாலியல் குற்றவாளிய அடையாளம் காட்டுனா, இங்க இருக்க ஆளுங்களோட முதல் ஆதங்கமே -“அய்யோ நமக்கு அந்தஸ்து, பணம், அரசியல் பலம், பதவி எல்லாம் இருந்திருந்தா நாமும் சில பல பெண்கள ரேப் பண்ணிருக்கலாமேன்னு ரேப் fantasies வெச்சுட்டு சுத்திட்டு இருக்கவங்க பெரிய்ய ஒழுங்கு மட்டை மண்ணாங்கட்டின்னு மேடைகள்ள speech குடுப்பாங்க. அதே ஆட்கள் பாலியல் குற்றவாளிகள கொண்டாடி, மகுடம் சூட்டுனாங்க - குற்றம் சாட்டுன பெண்கள “ஏன் டீ உயிரோட இருக்க? சாவலியா?”ன்னு கேட்டாங்க. “ஏன் டீ இப்ப சொன்ன, அப்பவே சொல்லல”ன்னு இந்த ஊர் பெரியவங்க ஊர் பெரியவங்கன்னு இன்னும் சில ரேப் அபாலஜிஸ்ட் பிறவிங்க கேட்டாங்க ரேப் கல்சரில் ஊருனவனுங்கத்தான் இந்த ஊர்ல.  பாலியல் குற்றவாளிகளுக்கு துணை போனவனுங்கத்தான் இங்க - அது தான் இந்த நாட்டின் கலாசாரம். கருணாஸ் அந்த டைம்ல குடுத்த பேட்டியில - ஆமா அத்தன பேரும் அப்படித்தான் அதுக்கென்ன இப்பன்னு பேட்டி குடுத்தவருதான். இப்படியாப்பட்ட மகான்கள் இருக்கும்போது சமுதாயத்துல பெண்களுக்கு பாலியல் குற்றங்கள்தான் சகஜமா நடக்கும்.

பாலியல் குற்றவாளிகள ஊக்குவிக்கும் கலசாரம் “இன்னும் ரேப் பண்ணு அப்யூஸ் பண்ணு, நான் துணை நிக்குறேன்”னு வரும் கலாசாரம். இப்ப போகுற போக்குல என்னத்த வேணா சொல்லலாம்னு சொல்லிட்டு போறாரு ஒரு அரசியல்வாதி - கேட்பார் யாருமில்ல. பல issues ல criticise பண்ண தயங்காத அரசியல்வாதிங்க - பாலியல் குற்றம்னா மட்டும், especially குற்றம் சாட்டப்பட்டவன் அவனுங்களோட ஆளாக இருந்தா போதும் - பொத்திக்கிட்டு கிடப்பாங்க. இப்படியாப்பட்ட பெண்கள அப்யூஸ் பண்ணுற, harass, sexually assault பண்ணிட்டு இருக்கும் பிறவிங்க வேறோட கூண்டோட கதறிக்கதறி நோய்வாய்பட்டு - ஏன் இன்னும் உயிரோட இருக்கொம், இன்னும் ஏன் சாகலை, சாவு வராதான்னு - அவதிப்பட்டு சாகனும்னு மனப்பூர்வமா வேண்டிக்குறேன் என சின்மயி பதிவிட்டுள்ளது தற்போது கவனம் பெற்று இணையத்தில் வைரலாகிறது.