24 special

திமுகவில் விலகி அதிமுகவில் ஐக்கியமாகும் சிறுத்தைகள்..?

Stalin, Thirumavalavan, Edappadi palanisamy
Stalin, Thirumavalavan, Edappadi palanisamy

நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் அணைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளை மும்முரமாக செய்துவருகிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் விருப்பமனுவை வெளியிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் வெளியேறி அதிமுக பக்கம் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைவலி என்றே சொல்லலாம்.


திமுகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தை கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது அதில் குறிப்பாக 4 தொகுதிகளை கேட்டு வந்தது. அதுவும் இந்த முறை சொந்த சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை கைப்பற்ற போராடி வருகிறது. ஆனால், திமுக பொறுத்தவரை விசிகாவுக்கு 2 தொகுதி கொடுத்து அதில் ஒன்று சொந்த சின்னத்திலும், மற்றொன்று திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட வைத்துவிடலாம் என ஆலோசித்து வந்தது. ஆனால், விசிக்காவின் திடீர் முடிவு ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திருப்பி பார்க்க வைத்துள்ளார்.

இந்த முடிவுக்கு காரணம் காங்கிரஸ் கட்சி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது அதிமுக பாஜகவில் இருந்து விலகியதால் அதிமுகவுடன் மற்ற கட்சிகள் கூட்டணி ஏற்படுத்த யாரும் வரவில்லை என தெரிகிறது. சமீபத்தில் நடந்த புதிய மாற்றம் அதிமுகவுக்கு பெரும் பலத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். அதாவது, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைமை கார்க்கே தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகையை நியமித்தார். இதனால் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்தவுடன் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியாது என தெரிவித்தார். அவரை தொடர்ந்து விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இணையதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் எத்தனை இடத்தில் டெபாசிட் இழக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என பதிவிட்டார். இது கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி செய்வது திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வப்பெருந்தகை தலைவராக நியமித்தது பல கட்சிகளுக்கு புரியாத புதிராக இருக்கிறது. அதிமுக எதிர்பார்த்தது காங்கிரஸ் கட்சி நமது பக்கம் வந்துவிடும் என்று ஆனால், மாநில தலைவர் மாற்றியதும் இனி தேசிய கட்சியை நம்புவது இல்லை என்பது போல் தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லை என கூறிவிட்டார். 

செல்வ பெருந்தகை பொறுப்பேற்றதற்கு பின்னணியில் திமுக இருக்கும் என்பதை அறிந்த திருமாவளவன் முழுமையாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக பக்கம் போகலாம் என சில தகவல் வருகின்றன. 4 தொகுதி திருமாவளவன் கேட்பதால் தனக்கு சாதகமாக ஸ்டாலின் பயன்படுத்திக்கொண்டதாக திருமாவளவன் எண்ணி தேர்தல் ஆணையத்தில் பானை சின்னம் பெற மும்முரமாக இருக்கிறார். சின்னம் வந்தவுடன் அதிமுக பக்கம் சென்று விடலாம் என கூறுகின்றனர். திருமாவின் ஓட்டை காங்கிரஸ் வைத்து பெற்றுவிடலாம் என ஸ்டாலின் நினைத்துவருகிறாராம். திருமாவுக்கு தேர்தல் நேரத்தில் செலவு செய்துகொள்ள சமீபத்தில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுன் உதவி இருப்பதால் திருமாவளவன் துணிந்து முடிவு எடுத்து வருகிறாராம். வரும் நாட்களில் தமிழகத்தில் பல மாற்றங்கள் நடக்கப்போகிறது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.