Cinema

ஓடிடியில் படத்தை வெளியிட நிபந்தனை போடும் தியேட்டர் உரிமையாளர் சங்கம்..!

Thirupur subramaniyan
Thirupur subramaniyan

சினிமா அரங்கத்தில் மக்கள் பொழுதுபோக்கிற்காக குடும்பத்துடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், சமீப மாதமாக வெளியாகும் சினிமா படங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்த கதைகளை கொண்ட படமாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும், முன்னணி நடிகர்களின் படம் வந்தால்  இரண்டரை மணி நேரம் உட்க்கார்ந்து பார்த்து வெளியில் வந்து அப்படத்தில் ஒன்னும் இல்லை குப்பை தான் காசு வேஸ்ட் எல்லாம் சொல்லி புலம்பி வருகின்றனர். இந்நிலையில்  தியேட்டர்கள் பக்கம் ரசிகர்கள் வருவதில்லை என கூறி அதற்கு ஒரே தீர்வு ஓடிடி நிறுவனம் என குற்றம் சாட்டியுள்ளார்.


2024ம் ஆண்டில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை காரணம் படம் வெளியான முதல் நாளே இணையத்தில் கசிந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள் ஓடிடி தளத்தில் வெளியாகும் அதில் குடும்பத்துடன் வீட்டில் பார்த்து கண்டு களிக்கலாம் என யோசிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக, தியேட்டருக்கு சென்றால் பார்க்கிங் செலவு, ஸ்நேஸ்க்ஸ் செலவு போன்றவை அதிகரிப்பதால் பெரிய அளவிற்கு தியேட்டரில் மக்கள் கூட்டம் செல்வதில்லை. பண்டிகை நாட்களில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படம் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படமாக ஏதும் அமையவில்லை என ரசிகர்கள் கூறுகின்றனர். 

முன்னதாக வெளியாகும் படங்கள் அடுத்த ஒரு வாரத்தில் படத்தின் மொத்த செலவையும் எடுத்துவிட்டது என கூறுவார்கள். ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் தலையில் தூண்டு போட்டது தான் மிச்சம் என்ற அளவிற்கு நஷ்டத்தில் செல்கிறார் என தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறினார். இந்நிலையில், ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்ரமணியம், அனைத்து படங்களும் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 4 மாதங்களாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், பெரும்பாலான படங்கள் நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடுவதும் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதனால் 8 வாரங்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியில் படங்கள் வெளியாகி  8 வாரங்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் பரமாரிப்பு கட்டணத்தை உயர்த்திகொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்படி தமிழக அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நிச்சயம் தியேட்டரை மூடுவோம் என் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

இதற்கு நெட்டிசன்கள் இன்னும் நீங்கள் பழைய காலத்தில் இருந்து வருகிறீர்கள் ஆனால், தற்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டது. நல்ல படங்கள் வந்தால் நிச்சயம் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு கொடுப்பார்கள் என கூறுகின்றனர். லியோ படம் வெளியானபோது திருப்பூர் சுப்ரமணியம் தியேட்டர் காத்து வாங்குகிறது உரிமையாளர்கள் மின்சார கட்டணம் கட்ட கூட வருவாய் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.