24 special

அன்றே கணித்த சோ... உடன்பிறப்புகளை கதற வைத்த ஒற்றை புகைப்படம்!

Cho, udhayanithistalin
Cho, udhayanithistalin

திமுக என்றாலே வாரிசு கட்சி தான் என்பதை நிரூபிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இப்படித்தான் நடக்கும் என தனது துக்ளக் பத்திரிகையில் சோ வெளியிட்ட புகைப்படம் ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது. 


கலைஞர் எப்படி மெல்ல, மெல்ல மகன் ஸ்டாலினை கட்சிக்குள் கொண்டு வந்து இளைஞர் அணி, சென்னை மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர், இப்போது முதலமைச்சர் மற்றும் திமுகவின் சிம்மாசனத்தில் அமரவைத்திருக்கிறாரோ? அதேபோல் ஸ்டாலினும் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை வைத்து வாரிசு அரசியலை ஆரம்பித்துள்ளார். 

2017ம் ஆண்டு வரை எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த உதயநிதி ஸ்டாலின், 2018ம் ஆண்டு முதல் படு தீவிரமாக திமுகவில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். உடனே உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் புதிய பொறுப்பு தர்றப் போறாங்களாமே? என ஊடகங்கள் பேச ஆரம்பித்தன. அதுக்கு ஏற்றார், 2019ம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். 


இதனையடுத்து இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய உதயநிதி, எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற 18 மாதங்களிலேயே அமைச்சராக பதவியேற்றுள்ளார். கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் உதயநிதி அமைச்சர் ஆக்கப்பட்டதாக கட்டுக்கதைகளும் உலவி வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் கலைஞர் எப்படி தனக்குப் பின் மகன் ஸ்டாலின் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என சில காய்களை நகர்த்தினாரோ... அதேபோல் உதயநிதியை அடுத்த முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்டாலின் காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

“அப்பா, மகன், பேரன் என அடுத்தடுத்து நீங்களே கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த இது என்ன மன்னர் ஆட்சியா?”, “இதெல்லாம் ஜனநாயகமே கிடையாது... அடிமைகளின் ஆட்சி நடக்கிறது” என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கமெண்ட்கள் தூள் பறந்து வருகிறது. இதனிடையே திமுகவின் வாரிசு அரசியல் தந்திரங்களை தோலுரிக்கும் விதமாக 2016ம் ஆண்டு தனது துக்ளக் பத்திரிகையில் சோ வெளியிட்ட புகைப்படமும், அதில் இடம் பெற்றிருந்த கருத்துக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ இந்த துக்ளக் செய்தியை நீங்களே படித்துவிட்டு, சிரித்துக்கொள்ளுங்கள்....