24 special

BoycottPathaan இந்து பெண்களை ஆபாசமாக சித்தரிப்பு; அரைகுறை ஆடையில் கெட்ட ஆட்டம் போட்ட தீபிகா படுகோனால் வெடித்த சர்ச்சை!

Deepika padukone
Deepika padukone

பதான் திரைப்படத்தில் இந்து பெண்களை மிகவும் ஆபாசமாக சித்தரித்துள்ளதாக கடும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான், இவரது நடிப்பில் இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள திரைப்படம் ‘பதான்’ இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி திரையுலகின் பிரபலமான யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக ‘பதான்’ உருவாகியுள்ளது. 


இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘பேஷராம் ரங்’ என்ற பாடல் கடந்த 12ம் தேதி இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. பதான் படத்தின் முதல் சிங்கிள் என்பதால் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் மற்றொருபுறம் இதே பாடலை பார்த்த இந்தி ரசிகர்கள் பலரும் கொந்தளித்து போயுள்ளனர். 

‘பேஷராம் ரங்’ பாடலில் பெரும்பாலான காட்சிகளில் திபீகா படுகோனே பிகினி உடையில் கெட்டம் ஆட்டம் போட்டுள்ளார். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்து பெண்கள் என்றாலே இப்படித்தான் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடனமாடுவார்கள் என உலக அரங்கில் சித்தரிக்க முயற்சிப்பதாகவும், இதுவே முஸ்லீம் பெண்கள் பற்றிய கதாபாத்திரத்திங்களை நேர்த்தியாக வடிவமைப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர். 

https://twitter.com/IshwarS90233688/status/1602477127961817090

அதேபோல் புராண காலங்களைப் பற்றியும் பாலிவுட் படங்களில் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், இந்து புராண கதைகளை வேண்டுமென்றே தவறான ரீதியில் படமாக்குவதாகவும் பல்வேறு கதைக்களங்களை சுட்டிக்காட்டி சர்ச்சை வெடித்துள்ளது. பதான் திரைப்படத்தில் இருந்து வெளியான ஒரே ஒரு பாடலால், ஒட்டுமொத்த பாலிவுட்டே இப்போது கடும் விமர்சனங்களுக்கும், ரசிகர்களின் விளாசலுக்கும் ஆளாகியுள்ளது. 

https://twitter.com/RajeshRB001/status/1602313552605638657

இதற்கு முன்னதாக தீபிகா படுகோனின் கணவர் ரன்வீர் சிங், பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்த புகைபடங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதுதொடர்பாக இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலதரப்பில் இருந்தும் புகார்கள் குவிந்ததை அடுத்து ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 292, 293 மற்றும் 509 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 67A ஆகியவற்றின் கீழ் ரன்வீர் சிங் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ஷாருக்கான் படத்தில் படுமோசமான உடையில் ஆபாச நடனமாடியதாக திபீகா படுகோன் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.