Cinema

புரட்சி பேசின தனுசுக்கு விழுந்த பெரிய ஆப்பு!

dhanush, vela ramamoorthy
dhanush, vela ramamoorthy

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர் இந்த படம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், நிவேதித்தா சதீஷ், சிவராஜ் குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இந்த படம் தற்பொழுது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது தென் தமிழகம் கிராமம் ஒன்று காலணி ஆட்சி காலத்தில் வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க சாதியினர் மற்றும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் போன்றோரின் அடக்கு முறையால் பழங்குடியின மக்கள் அடிமைகள் போல் வாழ்ந்து வருகின்றனர் இந்த அடக்குமுறைகளில் இருந்து தனது மக்களை காப்பதற்காக கதை நாயகன் தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின் கேப்டன் மில்லர் என்ற ஆயுத போராளியாக மாறுகிறான் அவன் எப்படி ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து போராளியாக மாறுகிறான் என்பதை விளக்குவதே கேப்டன் மில்லர்! மேலும் இறுதியாக தனுஷால் தனது மக்களை காப்பாற்ற முடிகிறதா என்பதை இந்த படத்தின் இறுதி காட்சிகள்.


அதுமட்டுமின்றி கேப்டன் மில்லர் படம் முழுவதும் ஒடுக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவராக தனுஷும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஆலய நுழைவு மறுக்கப்பட்ட மக்களின் பார்வையில் உண்மையான விடுதலை எதுவாக இருக்க முடியும் என்ற கேள்வியை அடித்தளமாக வைத்து தனுஷ் புரட்சி பேசுயுள்ளார். நாடே விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சமூக விடுதலையை பற்றி பேசுவதாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் இடதுசாரி கருத்துக்களை முன்வைத்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தை பாராட்டி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது அதற்கு வேறு ஒரு காரணங்களும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டாலும் உதயநிதி கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி பாராட்டி பேசி இருப்பது அரசியலில் கவனம் பெற்றது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் தனது பட்டத்து யானை நாவலின் கதையிலிருந்து திருடி எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாவலின் சொந்தக்காரரான வேலராமமூர்த்தி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

தமிழ் திரைப்படங்களில் நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி குற்ற பரம்பரை, குருதியாட்டம் மற்றும் அரியநாச்சி போன்ற பல நாவல்களை எழுதி புகழ் பெற்றவர் தமிழ் திரைப்படங்களிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றவர். இவர் தற்பொழுது தான் எழுதிய பட்டத்து யானை என்ற நாவலில் இருந்த கதையை திருடி கேப்டன் மில்லர் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாடி உள்ளார். மேலும் அவர், எனது நாவலை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாக்கியுள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது இதையெல்லாம் செய்வதற்கு அசிங்கமாக இல்லையா பட்டத்து யானை என்ற நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்னிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கேட்டிருக்கலாம் அல்லது அனுமதியும் பெற்றிருக்கலாம்! கேப்டன் மில்லர் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளேன். ஒரு படைப்பாளியின் கதையை கூச்சமே இல்லாமல் திருடுகின்றனர் ஒரு படைப்பாளியாக இந்த செயல் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார் வேல ராமமூர்த்தி. இப்படி ஒரு நாவலில் இருந்து கதையை திருடி புரட்சி பேசி இருக்கிறார்கள் இதெல்லாம் நியாயமா என்ற விமர்சனங்களும் தனுசை நோக்கி தற்போது குவிந்து வருகிறது.