24 special

தேவாலயங்களா அல்லது கொள்ளை கும்பல் இருக்கும் இடமா!

church issue
church issue

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல பெருவினை கிராமத்தைச் சேர்ந்த ஆல்வின் அருள் ஜோஸ் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மேலப் பெருவிளை ஜெபமாலை மாதா ஆலய பங்கு பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆனால் ஆலய பங்கு பேரவையில் அருள் ஜோஸ் மற்றும் ஆலயத்தின் பங்கு தந்தையான கார்மல் குரூஸ் என்பவரும் இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். அவ்வப்போது இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே சில பிரச்சனைகளும் சண்டைகளும் எழுந்து வருகிற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு அணிகளுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்த வாக்குவாதத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்த பொழுதும் இரு உனக்கு டேட் குறிச்சாச்சு அவ்வளவுதான் என்று பங்குத்தந்தை கார்மல் அணியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆல்வினை பார்த்து கூறியதும் பெரும் பரபரப்பானது இந்த வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதனை அடுத்து கடந்த இரண்டாம் தேதி வியாபார விஷயமாக காவல் கிணறு பகுதிக்கு வரும்படி ஆல்வின் ஜோஸிற்கு ஃபோன் ஒன்று வந்ததாகவும் அதன்படியே  இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பொழுது ஜோஸ் தனது நண்பர் ரெமிஜோஸ் என்பவருக்கு ஃபோன் செய்து இரண்டு நபர்கள் தன்னை துரத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.


அதற்குப் பிறகு சிறிது நேரத்திலே மற்றொரு நபர் அந்த போனை எடுத்து இங்கு ஜோஸ் அடிபட்டு மயக்கமாகி கிடக்கிறார் என்று கூற நண்பரும் விரைந்து சென்று ஆல்வினை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது ஆல்வின் ஜோசிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜோஸ் உயிருடன் இருப்பதாகவும் நினைவிலைந்து இருப்பதாகவும் சிகிச்சைகள் கொடுக்க ஆரம்பித்தனர். அதோடு மேல் சிகிச்சைக்காக சுங்கான் கடை பகுதியில் உள்ள முத்து என்ற தனியார் மருத்துவமனையிலும் ஜோஸ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சையிலே இருந்து வந்த ஆல்வின் ஜோஸ் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து ஆல்வின் இறப்பு என்பது விபத்தால் ஏற்பட்டது அல்ல! திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்றும் ஆல்வினுக்கு அடி ஏற்படுவதற்கு முன்பு சின்னத்துறை என்பவர் தான் அடிக்கடி ஆல்வினிடம் பேசியதாகவும் காவல்துறையிடம் ஆல்வின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர் இருப்பினும் காவல்துறையும் இதனை கண்டு கொள்ளாமல் விபத்து என்ற வகையிலே பேசி கேசை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் அதே பகுதியைச் சேர்ந்த இருதய ராஜன் என்பவரும் பங்குத்தந்தையான கார்மல் குரூப்ஸ் என்பவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், ஆல்வின் ஜோஸ் மட்டுமே இதில் பிரச்சனையாக உள்ளான் அவனது கை கால்களை உடைச்சு தூக்கி போட்டா போதும் இனி எந்த பிரச்சனையும் வராது என்று இருதய ராஜன் பங்குத் தந்தையிடம் கூறுவதும் இடம் பெற்றுள்ளது. ஆக வாக்குவாதத்தின் போது ராஜேஷ் உனக்கு தேதி குருசாச்சு என்று கூறியதும் ஆடியோவில் இருதய ராஜன் ஆல்வின் ஜோசின் கை கால்களை உடைத்து போட வேண்டும் என்று கூறியதையும் வைத்து இதில் ஆழ்வின் விபத்தில் இறக்கவில்லை இறப்பிற்கு பின்னால் பெரும் சூழ்ச்சி உள்ளதாகவும் அது குறித்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் மயில் ரோடு மடத்துணை கிராமத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தின் மெக்கானிக்காக பணிபுரிந்த சேவியர் குமார் ஆலயம் மற்றும் ஆலயம் கீழ் செயல்படும் பள்ளியின் கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் முறையிட்டு ஆலய நிர்வாகிகளிடமும் இது குறித்து கேட்டு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பதிவிட்டு வந்ததால் ஆலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை ராபின்சன் இல்லத்தில் இஸ்திரிபட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது கொலை செய்த ராபின்சனும்  தலைமறைவாக உள்ள நிலையில் அதே பகுதியில் தற்போது மற்றுமொரு கொலை சம்பவம் நடந்திருப்பது கன்னியாகுமரி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒவ்வொரு தேவாலயங்களிலும் இதுபோன்று நடந்து வருவதும் இன்னும் எத்தனை இதற்குப் பிறகும் நடக்க உள்ளது என்றும் கவலையில் உள்ளனர்.