Cinema

தொடரும் இமான் பிரச்சனை... சைலண்டாக அடுத்த படத்திற்கு மூவ் பண்ண சிவகார்த்திகேயன்..?

imman, Sivakarthieyan
imman, Sivakarthieyan

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகா இருந்தவர் சிவகார்த்திகேயன், சினிமாவில் மூன்று படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து சிறிய படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது மக்களிடம்  தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் முதல் சிவகார்த்திகேயன் மீது விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியான அயலான் படமும் பெரியதாக பேசப்படவில்லை அதனை தொடர்ந்து இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்க்கான பூஜைகள் நேற்று நடந்தது.


சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் மீது கடந்த வருடம் இசையமைப்பாளர் இமான் யூடியூப் பெட்டியில் எனது முதல் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என கூறினார். எனது வாழ்க்கையில் அவரை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என பேசியது சர்ச்சையாக மாறியது. அதனப்பிறகு பிரபல வலைப்பேச்சாளர்கள் சிவகார்த்திகேயனை விமர்சித்து வந்தார். சினிமாவில் இருப்பது போல் நிஜத்தில் நடிகர்கள் இருப்பதில்லை என கூறினார். இதற்கு விளக்கம் கொடுக்காமல் இருந்த சிவகார்த்திகேயன் மேலும் விமர்சனம் அதிகரித்தது. இதனால இயக்கலானார்கள் யாரும் சிவாவை வைத்து படம் இயக்க முன்வரவில்லை என கூறப்பட்டது.

தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார், அதன் பிறகு இயக்குனர் ஏஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் படத்தில் நடித்துவருவதற்குள் பாலிவுட் சென்று நடிகர் சல்மான்கானை நடிக ஒப்பந்தம் செய்துள்ளார். 2025ல் அந்த படத்தை வெளியிட இயக்குனர் முடிவெடுத்தார். அதற்குள் சிவாவை வைத்து ஒப்பந்தம் போட்ட படத்தையும் முடித்துவிட ஆர்வம் காட்டிய முருகதாஸ் அந்த படத்திற்கான பூஜை காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்றது. இதில் அனிருத், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல் நடந்த பூஜை விழா தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் என்று அவரே நம்பி வரும் நிலையில் ஏன் பிரமாண்டம் இல்லாமல் சைலண்டாக முடிந்துவிட்டது என கேள்வி கேட்டு வருகின்றனர். இமான் குடும்பத்துக்கு செய்த செயலுக்கு இதும் வேண்டும் இன்னும் வேண்டும் என பதிவிட்டு. படத்திற்கான பூஜை இப்படியெனால் படம் வெளியானால் வந்தது தெரியமால் சென்றுவிடுமோ என கேள்வி கேட்டு வருகின்றனர். தமிழில் முருகதாஸ் சம்பவம் செய்வார் என்ற நம்பிக்கை இல்லை பாலிவுட்டில் நிச்சயம் முருகதாஸ் அதிகம் கவனம் செலுத்துகிறார் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். 

சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சாய்ப்பல்லவி உடன்  21ஆவது படத்தில் நடித்துவருகிறார் அவர். கண்டிப்பாக இந்தப் படமும் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் எஸ்கே ரசிகர்கள் முருகதாஸுடன் இணைந்திருக்கும் படமும் அவரது கரியரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கமெண்ட்ஸை பறக்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.