
நாட்டில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்கள் தொடர்ந்து புது புது முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்றவைகளை தடுக்க இணயத்தில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கடந்த மாதம் இறந்ததாக செய்திகள் வெளியில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியது. அது பொய் என பூனம் பாண்டே விளக்கம் கொடுத்த நிலையில், அவருக்கு எதிராக புகார் ஒன்று எழுந்து 100கோடி வரை அபராதம் கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பூனம் பாண்டே cervical cancer எனும் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக திடீரென மரணம் அடைந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது டீம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வட இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பூனம் பாண்டே டீமை தொடர்பு கொண்டு கேட்டபொழுதும் இதையே சொல்லியுள்ளனர். இதனால் அவர்களும் அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியிட தமிழகத்திலும் புற்று நோயால் பூனம் பாண்டே இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டனர். ரசிகர்களும் பாவம் இந்த வயதில் இறந்து விட்டனர் என வருத்தம் தெரிவித்து வந்தனர். பாலிவுட் பிரபலமாகும் தங்களது இணைய பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால், அடுத்த நாள் நான் மரணிக்கவில்லை என வீடியோ வெளியிட்டு அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தினார்.
வீடியோ மூலமாக அடுத்த நாள் நான் மரணிக்கவில்லை உயிரோட தான் இருக்கிறேன் என பதிவை கடுப்பான ரசிகர்கள் சரமாரியாக திட்டி வந்தனர். அதை காத்துக்கொள்ளாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நான் ஒரு நாடகம் நடத்தினேன் என் கூறியிருந்தார். தனது அம்மாவும் கேன்சர் பாதிப்பால் அவதிப்பட்டார். நம் நாட்டில் பல பெண்கள் கர்ப்பவாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். அதுகுறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தவே நான் இறந்து விட்டதாக அறிவித்தேன் என விளக்கம் அளித்திருந்தார் பூனம் பாண்டே. ரசிகர்கள் சரமாரியாக விளையாட்டுக்கு கூட இப்படி கேன்சர் என்று சொல்லக்கூடாது என கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பூனம் பாண்டே இணையத்தில் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வுக்காக மட்டுமே என சொல்லி ரசிகர்களை சமாதான படுத்தி வந்தார்.
இந்நிலையில், ஃபைசன் அன்சாரி என்பவர் பூனம் பாண்டே மற்றும் அவரை பிரிந்து இருக்கும் கணவர் சாம் பாம்பே இருவரும் தான் இணைந்துக் கொண்டு இந்த மரண டிராமாவை போட்டுள்ளனர் எனக் கூறி எஃப்ஐஆர் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். புற்றுநோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக தனது சொந்த லாபத்துக்காகத்தான் பூனம் பாண்டே இதனை செய்திருக்கிறார் என 100 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவல்நிலைய போலீசார் பூனம் பாண்டேவை கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதுபோல விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் பலரும் இன்ஸ்டாவில் தேவையில்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தி லைக்குக்காக இது போன்ற வேலைகளில் இருந்து கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.