திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் அரசு பணிக்கு எனக்கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகளே நூதன முறையில் டிராக்டர்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே நில ஆக்ரமிப்பு, மணல் கொள்ளை, வெட்டுக்குத்து என்று தான் நியாபகம் வரும். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது நகைப்புக்குரியது. அந்த வகையில் மணல் கொள்ளையில் ஈடுபடும் தி.மு.க-வினரை, கட்சியிலிருந்து நீக்குவதாகக் கண்துடைப்பு நாடகமாடிவிட்டு, ஓரிரு மாதங்களில் பின் வாசல் வழியாக மீண்டும் கட்சியில் இணைத்து சட்டம் ஒழுங்கை கேலிக்குள்ளாக்குகிறது தி.மு.க. மணல் கொள்ளையர்களால் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மணல் கொள்ளை என்பது தடுக்க முடியாத வகையில் நடந்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பாலாற்றில் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் மழை காலங்களில் ஏரி,கால்வாய் மதகுகள் உடைப்பு ஏற்படுவதை சரிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை சாக்கு மூடைகளில் மணல் நிரப்பி எடுத்து செல்வது வழக்கம்.
ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாக்கு மூட்டைகளில் மணல் நிரப்பி எடுத்து செல்வதை தவிர்த்து, பாலாற்றில் இந்த முறை 5 ட்ராக்டர்களை கொண்டு மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதை அறிந்த பொதுப்பணித்துறையினர் மறைமுகமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ட்ராக்டர்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதில் உஷாரான பொதுப்பணித்துறையினர் கணக்கு காண்பிப்பதற்காக ஆம்பூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஓரிரு டிரகட்ராகளில் மனல் கொண்டு வந்து இருப்பு வைத்துள்ளனர். இருப்பினும் காலை முதல் டிராக்டர்கள் கடத்திய மணல் எங்கே சென்றது ? என மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
முன்னதாக மாட்டு வண்டியில் நடந்த மணல் திருட்டு, தற்போது ட்ரெக்டர்கள் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். கனிம வளங்கள் கொள்ளை போவது வழக்கமாகி விட்டது. தொடரும் மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே இதேபோல் எல்லா ஊர்களிலும் மணல் கொள்ளை தலையாமறைவாக நடைபெறுவதாக கூறி வருகின்றனர். அதிகாரிகளிடம் கூறினால் நடவடிக்கை எடுப்பது போல் மக்களிடம் ஆக்சன் கொடுத்து விட்டு மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை தட்டி கேட்கும் அதிகாரிகளை திருக நிர்வாகிகள் ஆட்சியின் பவரை கையில் வைத்து கொண்டு கொலை செய்யும் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறுகின்றனர்.