24 special

வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக்கொண்ட முதல்வர்...!நடக்க போவது என்ன...?

Mk Stalin,pm modi
Mk Stalin,pm modi

பிரதமர் மோடிக்கு பதில் கொடுக்க சென்று தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பமே தமிழகம்தான் என பிரதமர் மோடிக்கு பதில் கொடுக்கு சென்று புதிய வினையை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று  நடைபெற்றது. மணமக்கள் பிரவீன் குமார், அஸ்வினி திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “திமுக நடத்தும் மாநாட்டிற்கும் போராட்டத்திற்கும் குடும்பம் குடும்பமாக வாருங்கள் என்று கலைஞர் அழைப்பு விடுப்பார். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆம். கருணாநிதியின் குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். 50 ஆண்டுகளாக திராவிட இயக்கம் தான் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. நவீன தமிழகத்தை உருவாக்கியது கலைஞர் தான்.

பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த அச்சம் தான் பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் குறித்து பேச வைத்துள்ளது. மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதுவரை பிரதமர் அங்கு செல்லவில்லை. இந்த சூழலில் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார். இதன் மூலம் நாட்டில் மதப்பிரச்சனையை அதிகரித்து குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என அவர் நினைத்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

இங்கு தான் தற்போது சிக்கல் உண்டாகி இருக்கிறது, ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார், போதாத குறைக்கு முதல்வர் ஸ்டாலின் மருமகனுக்கு நெருக்கமான இடங்களிலும் வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது இப்படி பட்ட சூழலில் தொடர்ச்சியாக பாஜகவை விமர்சனம் செய்வதால் இதுநாள் வரை மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் திமுகவிற்கு போக்கு காட்டிய மத்திய அரசு நேரடியாக களத்தில் இறங்குகிறதாம்.

இன்னும் சொல்ல போனால் நேரடியாக  அமிட்ஷா வருகின்ற ஜூலை மாதம் தமிழகத்திற்கு வருகை தர இருப்பதாகவும் நேரடியாக அண்ணாமலை தொடங்க இருக்கும் பாதை யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கவும் இதற்காக சிறப்பு குழுவும் தயார் செய்யப்பட்டு வருகிறதாம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி எந்த ரத்தத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினாரோ அதே ரதத்தை அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் பாதையாத்திரை நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியே கொடுத்து அனுப்ப இருக்கிறாராம்.

வழக்கமாக திமுகவை தேசிய பாஜக தலைமை நேரடியாக கவனம் செலுத்தி விமர்சனம் செய்வது என்பது மிக மிக அரிதான விஷயம் ஆனால் இப்போது தமிழகத்தில் திமுகவினர் பாஜகவை விமர்சனம் செய்வதையும் தவறான தகவலை பரப்புவதையும் நேரடியாக பிரதமர் வரை வரை கொண்டு செல்ல படுகிறதாம்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இணையாக சித்தாந்த எதிர் கட்சியாக திமுகவை பாஜக பிக்ஸ் செய்துவிட்டதாம் இனி வரும் நாட்களில் அண்ணாமலை தமிழகத்தில் மேற்கொள்ளும் பாதயாத்திரையும் அதை தொடர்ந்து அரங்கேரும் நிகழ்வுகளும் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை அதிர செய்யும் வகையில் இருக்க போகிறதாம்.

எனவே சிறிது நாட்கள் அமைதியாக இருக்கலாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு மூத்த சீனியர்கள் அறிவுரை வழங்கிய நிலையில் அதனை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் பிரதமருக்கு பதில் கொடுக்க சென்று வசமாக முதல்வர் ஸ்டாலின் சிக்கி இருக்கிறார் என கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.