24 special

நோன்பு திறக்கும் விழாவில் அமைச்சர்கள் இடையே மோதல்... மேடையில் நடந்த வாக்குவாதம்..!

Ponmudi, Senji masthan
Ponmudi, Senji masthan

உயர்கல்வி துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அவ்வவ்போது சர்ச்சையில் சிக்குவதை தொடர்கதையாக வைத்துள்ளார். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுகவே உதாரணமாகும் என்ற பேச்சு எழுந்த நிலையில். கடந்த சில நாட்களாக அமைச்சர் பொன்முடி  வழக்குகளில் சிக்கியிருந்தார் தற்போது அதில் இருந்து வெளிய வந்த பிறகு அவரது சேட்டையை மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த முறை மக்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தாமல் அமைச்சர் உடன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பொன்முடி உள்ளே வருவதர்க்கு முன்பே அம்சிகார் செஞ்சி மஸ்தான் பேச தொடங்கினார், உடனே நிர்வாகி ஒருவர் பொன்முடி வந்து கொடு இருக்கிறார் கொஞ்சம் பேச்சை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதனை மதிக்காமல் செஞ்சி மஸ்தான் பேசிக்கொண்டு இருந்தாராம்..

உடனே கோவப்பட்ட பொன்முடி பேசியது போதும் உட்க்காரு என்பது போல் எழுந்து செஞ்சி மஸ்தான் கையில் இருந்த மைக்கை வெடுக்கென்று பிடுங்கினார். அதுமட்டுமில்லாமல் செஞ்சி மஸ்தானை மேடையிலேயே திட்டியுள்ளார் பொன்முடி. செஞ்சி மஸ்தான் அவர் பேசியதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த மறுப்பை ஏற்க மறுத்தவர் கடுமையாக அவரை சாடினார். இது அங்கிருந்தவர்களிடம் முகம் சுளிக்க வைத்துள்ளது. அது மட்டும் இன்றி நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தவர், ஆத்திரம் தாங்க முடியாமல் மறுபடியும் கண்டபடி அவரை திட்டி விட்டு சென்றுள்ளார்.  இது திமுக தொண்டர்களிடம் அதிர்ச்சியாகியுள்ளது.

சமீப மாதமாக அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்துகொள்ள கூடாது என்று திமுக தலைமையே உத்தரவிட்டிருந்ததாம். ஏனென்றால் இருவரும் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் பொன்முடி மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார். அதே போல் அமைச்சர் எ.வ வேலுவும் பொன்முடிக்கும் செட் ஆகாது என்பதும் ஒரு தகவல் உலா வருகிறது. கடந்த சில நாட்களாக அமைச்சர் பொன்முடி மேடையில் பெண்களை அவர்களது சாதி வைத்து பேசுவதும், பெண்க்ளுக்கு இலவச பேருந்தை ஓசி பஸ் என்று தொடர்ந்து பேசி வருகிறார் அவர் மீது திமுக தலைமையே அதிருப்தியில் இருந்தது. அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இப்தார் நோன்பு தொடர்பாக முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் முறையில் செஞ்சி மஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதன் காரணமாகவே அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், பொன்முடி அவரை பொது இடம் என்று கூட பார்க்காமல் சரமாரியாக தாக்கி பேசியுள்ளது அங்கு கலந்து கொண்ட இஸ்லாமிய சமூகத்தினரிடம் முகம் சுழிக்கும் நிகழ்வாகவும் அதிர்ச்சியையும் ஏறப்டுத்தியுள்ளது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் திமுகவினரின் இத்தகைய செயல் சிறுபான்மையின மக்களிடம் திமுக கட்சி மீது அதிருப்தி ஏறப்டுத்தியுள்ளது. இதனால் அதிமுக பக்கம் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பிரியலாம் என்றும் கூறப்படுகிறது.