பழங்காலத்திலிருந்து மண்ணில் செய்யப்பட்ட மண்பாண்டங்கலான மண்பானை, மண் பாத்திரங்கள் மேலும் கல்லில் செய்யப்பட்ட பானை மற்றும் பாத்திரங்கள் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் கல்லினால் செய்யப்பட்ட தோசை சட்டிகள் மற்றும் பணியாரம் செய்ய போன்றவைகள் கூட கல் பாத்திரங்கள் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மரத்தினால் செய்யப்பட்ட சட்டிகள் கூட சமைப்பதற்கு பயன்படுத்தினர். இது போன்ற மண் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட சட்டிகளில் சமைத்து சாப்பிடுவது மிகவும் ருசியானதாகவும் மற்றும் சத்து நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் நாளடைவில் இதுபோன்ற மண் மற்றும் கல்லில் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதை மக்கள் விரும்பாமல் இருந்தனர். சமீப காலங்களாக அதிக அளவில் மக்கள் இந்த போன்ற மண் பாண்டங்கள் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட சமைக்கும் பொருட்களை வாங்காமல் நான்ஸ்டிக் போன்ற சமையல் பாத்திரங்களை வாங்கி வந்தனர்.
அப்படி நான்ஸ்டிக் பொருட்கள் வளர்ந்து வரும் நேரத்தில் மீண்டும் அனைவரும் மண் சட்டிகள் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட சமையல் சட்டிகள் போன்றவற்றிற்கு மாறுகின்றனர். ஏனெனில் இந்த நான்ஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில் எந்த ஆரோக்கியமும் இல்லை என சில ஆராய்ச்சிகள் மற்றும் மருத்துவர்கள் மூலம் தெரிய வருகிறது. அதனால் மீண்டும் அனைவரும் மண் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட சக்திகளை வாங்குவது ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் மண் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் வாங்கி சமைத்து அதனை உண்டால் எந்தவிதமான நோயும் வரப்போவதில்லை என்று அவர்களுக்கு நம்பிக்கை வந்திருக்கலாம். மேலும் இன்று பல சமையல் வீடியோக்களில் கூட இதுபோன்ற பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதோடு அந்த பொருட்களை எங்கு வாங்குவது என்று கூட கூறுகின்றார்கள். அதனை பார்ப்பவர்களும் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். சாதாரணமாக பார்த்தாலே தமிழர்கள் சமையல் செய்வது என்பது மிகவும் மதிப்பிற்குரிய ஒரு விஷயமாகவே இருக்கும்.
ஒரு சமையல் செய்யும் பாத்திரத்தில் கூட என்ன மாதிரியான நன்மைகள் உள்ளது என்று அதனை அறிந்து சமைப்பார்கள். செம்பு பானைகளில் தண்ணீர் வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது, மேலும் வெங்கலம், பித்தளை போன்ற சட்டிகளில் சமைப்பதினால் ஒரு தனி சக்தியே உள்ளது என்று பழந்தமிழர்கள் முதல் பலரும் கூறுவார்கள். இது போன்று வீடியோஸ்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு தான் உள்ளது நாமும் அதை பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். அதே சமயத்தில் சிலர் எந்த மாதிரியான பாத்திரங்களை பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். முன்பை விட தற்போது ஆரோக்கியத்தில் மிகவும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் கொஞ்சம் சாப்பிட்டாலும் கூட அதே சத்து நிறைந்ததாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நான் ஸ்டிக் மட்டும் சில்வர் பாத்திரங்களுக்கு நிறைய கடைகள் இருந்ததைப் போல தற்போது இந்த கல்லு பாத்திரங்கள் மற்றும் கல்லு பாத்திரங்களுக்கு என்று தனியாக கடை ஒன்று தொடங்கி உள்ளனர். இது குறித்த வீடியோ இப்போதே இணையத்தில் வைரலாகி கொண்டுள்ளது. அங்கு தண்டவாளர் கல் தோசைக்கல், கிரில் பேங்கள், சப்பாத்தி கல், கல்லு பாத்திரங்கள், கள்ளுக்கடாய், கல் சமையல் பாத்திரங்களுக்கென்று தனியாக சட்டிகள், ஆப்பம் மற்றும் பணியாரம் செய்யும் பாத்திரங்கள் என பல வகையில் பாத்திரங்கள் இந்த கடையில் வைத்துள்ளனர். மேலும் வாங்க நினைப்பவர்கள் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று கூறுகின்றார்கள். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது!!