தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக நடித்து வரும் ஒரு பிரபலமான நடிகர் தான் இந்த டேனியல் பாலாஜி. வெறும் 48 வயதான இவர் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று சென்னையில் பிறந்தார். சின்ன வயது முதலில் இருந்தே இயக்குனராக ஆக வேண்டும் என்று இவர் மனதில் இருந்துள்ளது. அதனால் இவர் சென்னையில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத் தயாரிப்பு படிப்பினை படித்து முடித்தார். ஆனால் திரைப்பட உலகிற்கு வந்த தொடக்கத்தில் இவருக்கு இயக்குனராக ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் சிக்கலிங்கய்யா என்னும் கன்னட திரைப்பட இயக்குனர் இவரின் மாமா ஆவார். மேலும் தமிழில் பிரபலமான முரளி அதர்வா போன்றவர்கள் இவரின் குடும்பத்தார்கள் ஆவார்கள்!! என்னதான் பல பிரபலங்களின் சொந்தமாக இருந்தாலும் அந்தப் பிரபலங்களை எல்லாம் பயன்படுத்தாமல் தனது முயற்சியினால் கஷ்டப்பட்டு தனது திறமையை காட்டி மேலே வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் முதலில் ஏப்ரல் மாதத்தில் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் காதல் கொண்டேன், காக்க காக்க எனத்தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு வந்தார். மேலும் இவர் நடித்த வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், சிறுத்தை மற்றும் பகவான் போன்ற திரைப்படங்களில் மூலம் அதிக வரவேற்பை பெற்றார். இந்த படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட இவரின் நடிப்பு மக்கள் அனைவருக்கும் பிடித்திருந்தால் அதிகமாக ரசிகர்களை பெற்றிருந்தார். இவரின் நடிப்பு மிகவும் தனியாக இதுவரை யாரும் செய்திடாதது போல் சிறப்பாக எனது நடிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பார். ஒரு வில்லன் என்ற கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக தன்னடிப்பின் மூலம் காட்டியவர். இப்படிப்பட்ட சிறப்பான நடிகர் தற்போது மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார். நேற்று இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்தவித பலனும் இன்றி இவரின் உயிர் பிரிந்துள்ளது.
முன்னதாக இவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். பல படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமீபத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோவிலை கட்டினார். மேலும் அதைத் தொடர்ந்து அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைத்திருந்தார். இந்தக் கோவிலை கட்ட ஆரம்பித்ததில் இருந்து முக்கால்வாசி நேரம் அவர் வேலை நடக்கும் இடத்திலேயே தான் இருந்துள்ளார். மேலும் கட்டிட வேலைகளில் பாதி இவரும் எடுத்து நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து அவர் கூறுகையில் எனக்கும் கலைநயம் என்பது அதிகமாகவே இருக்கும். கலைகள் மீது எனக்கு மிகவும் ஆர்வம் அதிகம் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.இப்படி தனது முயற்சியினால் கோவிலை கட்டி முடித்து அதற்கு கும்பாபிஷேகமும் வைத்து திறந்து கொஞ்ச நாட்களிலேயே திடீரென்று மாரடைப்பால் இவர் இறந்துள்ளது சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும் இன்னும் எத்தனை நடிகர்கள் வந்தாலும் இவரைப் போல் சிறப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று இவரின் ரசிகர்கள் கூறுகின்றனர்!! இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதால் மருத்துவர்களால் கூட இவர் எப்படி இருந்தார் என்று கூற முடியவில்லை என்று செய்திகள் வெளியாகிறது. மேலும் இவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனையில் இருந்து போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இளமை காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது. இவ்வாறு புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்ததனால் கூட இப்படி மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகிறது.