24 special

ஜார்கண்டில் வலுவெடுத்த ஓரகத்திகள் சண்டை!

SITA SORAN, KALAPANA SORAN
SITA SORAN, KALAPANA SORAN

2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள பல மாநிலங்களில் பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது முதலில் பிஹார் மாநில முதல்வரும் இண்டி கூட்டணி அமைப்பதற்கு முக்கிய புள்ளியாகவும் இருந்த நிதிஷ்குமார் கூட்டணியின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து பாஜகவில் இணைந்தார், மேலும் டெல்லி அரசின் மதுபான கொள்ளை ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா போன்றோரை கைது செய்தது. மேலும் இது குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ச்சியாக சம்மனை அனுப்பி வருகிறது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநில அரசு தற்போது முற்றிலும் மாறி வேறொரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதாவது நில மோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாடி வந்தனர்.


அதோடு இந்த வழக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த்க்கு பலமுறை சம்மன் அனுப்பியது.இருப்பினும் அவர் ஆஜராகாமல் அலட்சியம் காட்டி வந்ததை அடுத்து டெல்லி சென்ற ஹேமந்தை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டு ரூபாய் 36 லட்சம் ரொக்கத்தையும் பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்களையும் பறிமுதல் செய்து வந்தது. இதற்கிடையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு தொகை தரப்படும் என்று அம்மாநில பாஜக தலைமை ஜார்கண்ட் முழுவதும் போஸ்டர் அடித்து அம் மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தியது. அதற்கேற்றார் போல் ஹேமந்த் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை அது மட்டும் இன்றி அம்மாநில தலைநகர் காஞ்சியில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் பதவி விலக இருப்பதாகவும் அவருக்கு பதில் அவரது மனைவி கல்பனாவை முதல்வராக திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ராஞ்சியில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டார், இணையவாசிகள் இதனை பலவாறு விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ஹேமந்த் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதனால் அவரது மனைவி கல்பனா தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்ற வகையில் கட்சி முழுவதும் பேசப்பட்டது ஆனால் திடீரென்று ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த சம்பை சோரன் பதவி ஏற்றார். ஆனால் இந்த அரசியல் விவகாரத்திற்கு இடையில் சிபு சோரனின் குடும்பத்திலும் இந்த விவகாரம் புகைச்சலை ஏற்படுத்த ஆரம்பித்தது ஏனென்றால் பேரவை உறுப்பினராக கூட இல்லாத அரசியல் அனுபவமே இல்லாத கல்பனா சோரனை எதற்காக முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்தனர் என்று ஹேமந்த் அண்ணன் மனைவியான சீதாச்சோரன் கேள்வி எழுப்ப அண்ணன் - தம்பி குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முற்றியது.

இதனால் கோபம் அடைந்த சீதா சோரன் தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் 14 ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்ட எனக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லை என் கணவர் துர்கா சோரன் மறைவிற்கு பின்பு நானும் என் குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டோம் என்று தனது வேதனைகளை தெரிவித்து பாஜகவில் வளர்ந்த எதிர்காலத்திற்கான பல திட்டங்கள் உள்ளது அதனால் பாஜகவில் இருந்து மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பதற்கு வலு சேர்க்க உள்ளேன் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார் இந்த விவகாரம் அரசியல் வட்டாரம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.