
தமிழகத்தில் பெரும் பரபரப்பான விஷயமாக விஸ்வரூபம் எடுத்திருப்பது போதைப்பொருள் கடத்தல் விவகாரம்! அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் திமுக அயலக அணியை சேர்ந்த ஜாபர் சாதிக் முக்கிய கடத்தல் மன்னனாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார்.முன்னதாக போதை கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் பெயர் அடிபட்ட உடனே திமுக அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது இருப்பினும் அவர் மேற்கொண்ட கடத்தல் செயல்களுக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில் ஜாபர் சாதி தலைமறைவாகியதால் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுப்பதற்காக டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையங்களுக்கு லிக்அவுட் நோட்டீசை வழங்கியுள்ளது மேலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஜாஃபர் சாதிக் வீட்டில் சம்மனையும் ஒட்டியது.
அதுமட்டுமின்றி தனது வீட்டின் கீழ் தளத்தை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்த ஜாபர் சாதிக் அங்கு பல சினிமா நட்சத்திரங்களுடன் உரையாடியதாகவும் அரசியல் பிரமுகர்களும் அங்கு வந்து சென்றதாகவும் டெல்லி போலீசார் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வரும் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எந்த ஒரு பையையும் எடுத்து வராமல் வந்ததாகவும், ஆனால் ஜாபர் சாதிக்கை சந்தித்து விட்டு செல்லும் பொழுது பெரிய பெரிய பைகளுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜாபர் சாதிக்கின் அலுவலகத்திற்கு வந்து சென்ற அனைவரின் பெயரையும் பட்டியலிட்டு அவர்களுக்கும் ஜாஃபர் சாதிக்கும் உள்ள தொடர்பு குறித்த விசாரணை மேற்கொள்ளதாகவும் விரைவில் அவர்கள் அனைவருக்கும் விசாரணை நோட்டீசை டெல்லி போலீஸ் வழங்கும் என்றும் கூறப்பட்டது.
மேலும் ஜாபர் சாதிக் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததால் அவருடன் இணைந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப்பெரியவன் என்ற படமும் தயாராகிக் கொண்டு வந்தது இந்த விவகாரத்திற்கு பிறகு அந்த படத்தை நிறுத்திய இயக்குனர் அமீர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவருடன் இனி பணியாற்ற போவதில்லை என்று கூறியிருந்தார் ஆனால் இதற்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது ஏனென்றால் பல ஆண்டுகளாக ஜாபர் சாதிக்குடன் நெருங்கி பழகி வந்த அமீருக்கு அவர் போதை கடத்தல் செய்து வந்தார் என்பது தெரியாமலா இருந்திருக்கும் அதுமட்டுமின்றி இருவரும் சேர்ந்து பல தொழில்களை ஆரம்பித்துள்ளனர் அவற்றிற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று அமீர் ஜாஃபரிடம் கேட்காமலா இருந்திருப்பார் என்ற வகையில் கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து அமீர் இது குறித்தும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் அதை தன்னை குறித்து தவறான செய்திகள் பரவுவதாகவும் ஜாஃபர் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பையும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் அதன்படியே தற்போது அமீரை விசாரணை மேற்கொள்ள என் சி பி சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் அவர்களுக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவரை தனது கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மற்றுமொரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜாபர் சாதிக்வுடன் திமுகவைச் சேர்ந்த நட்சத்திர அரசியல் பிரமுகர் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதை போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணையில் கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கும் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிடும் என்றும் கூறப்படுகிறது. இப்படி போதை கடத்தல் விவகாரம் அடுத்தடுத்த கட்டத்தை உடனடியாக அடைந்து வருவது திமுகவை ஆட்டம் காண வைத்துள்ளது.