கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று காலை பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் க மாணவர்கள் அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று கோஷம் போட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அந்த பெண்ணை தமிழகத்தை சேர்ந்த சில போராளிகள் கொண்டாடி வருகின்றனர் இதில் கூத்து என்னவென்றால் இப்போது கர்நாடக புர்கா பெண்ணை கொண்டாடும் நபர்கள் சில ஆண்டுகள் முன்னர் ஜூலியை வீர தமிழச்சி என்றும் சிங்க தமிழச்சி என்றும் கொண்டாடினர்.
ஆனால் இறுதியில்தான் தெரிந்தது ஜூலியின் உண்மை முகம் அதுபோல் தற்போது கர்நாடக புர்கா மாணவி விவகாரத்தில் அவர் இருவரை புகைப்படம் எடுக்க முன்பே சொல்லிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தார் என்றும் அந்த இருசக்கர வாகனம் ஒட்ட அவர் ஓட்டுநர் உரிமம் கூட வைத்து இருக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
தற்போது இணையத்தில் வீர புர்காச்சியாக வலம் வந்த பெண் விரைவில் கர்நாடக ஜூலியாக மாறினாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
More watch video