Tamilnadu

கதறும் இஸ்லாமிய வியாபாரிகள் கர்நாடகாவில் நடப்பது என்ன 6 பேரால் 60% போச்சே ?

Islamic
Islamic

புரட்சி என்ற பெயரில் அமைதியாக இருந்த இந்து மாணவ மாணவிகளுக்கு மத ரீதியில் கொந்தளிப்பை உண்டாக்கிய காரணத்தால் தற்போது பெங்களூரு உடுப்பி உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கடைகள் வணிக நிறுவனங்கள் உணவகங்களில் வியாபாரம் 60% அளவிற்கு குறைந்து விட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அனைவருக்கும் சீருடை எனும்போது சில இஸ்லாமிய பெண்கள் மட்டும் நாங்கள் புர்கா மட்டுமே அணிவோம் என தெரிவித்த காரணத்தால் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இஸ்லாமிய மாணவிகளுக்கு படிப்பை தாண்டி மதம் முக்கியம் என்றால் எங்களுக்கு எங்கள் மதம் முக்கியம்தான் என இந்து மாணவிகள் காவி நிறத்தில் ஷால் அணிய தொடங்கினர் மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தை தாண்டி தேசிய அளவில் இந்த விவகாரம் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பல்வேறு நபர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணை நடந்தது. மேலும் விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.

இது ஒரு புறம் என்றால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு சிலர் தொடங்கிய போராட்டம் மிக பெரிய எதிர்வினையை உண்டாக்கியுள்ளது, குறிப்பாக இஸ்லாமிய கடைகளில் பலர் வியாபாரத்தை தூண்டித்த தாகவும், குறிப்பாக உடுப்பி பகுதியில் வியாபாரம் 60% அளவிற்கு குறைந்து விட்டதாகவும் இஸ்லாமிய வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் முடிவு எடுத்துவிட்டால் மாற மாட்டார்கள் என்பதால் ஒரு 6 இஸ்லாமிய மாணவிகள் தொடங்கிய போராட்டம் இப்போது இஸ்லாமிய வியாபாரிகளுக்கு 60% அளவிற்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது இதே நிலை நீடித்தால் விரைவில் கர்நாடக மாநிலம் முழுவதுமே இஸ்லாமிய அமைப்புகள் வியாபார ரீதியாக தனித்து விடப்படும் சூழல் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

More watch videos