![Ragul Ganthi, MK Stalin](https://www.tnnews24air.com/storage/gallery/jj5eEnAKglLXXd8ohv8fZkWK8q89F9lqUHb7J7WH.jpg)
லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்புகளை அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை கூட்டணிக்கட்சிகள் அப்படியே இருந்து விட்டது என்று தெரிகிறது. அதிமுகவும்- பாஜகவும் அதன் கூட்டணி அமைப்பது பெரும் சிக்கலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் திமுகவில் இழுபறி நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். வரும் நாட்களில் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்ப்படும் மக்கள் பொறுத்திருந்து பாருங்கள் என பிரபல அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணி தொடங்கிய பின் ஒவ்வொரு கட்சிகளும் பிரிந்து சென்றது ஆரம்பத்தில் டெல்லி ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்குவதாக இல்லை என கூறியது. ஆனால், இன்று தொகுதி தொடர்பான சுமுக பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததாக செய்திகள் வந்தன. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் தொடக்கிறது. இதற்கிடையில் கடந்த முறை பெற்ற 9 தொகுதிகளி விட இந்த முறை எப்படியாவது அதிகமாக தமிழகத்தில் தொகுதிகளை கேட்டு போட்டியிட வேண்டும் என்ற குறிக்கோள்களை எண்ணி வருகிறது. ஆனால், திமுகவை பொறுத்தவரை கடந்த முறையை விட இந்த முறை தொகுதியை குறைக்க திட்டம் போட்டு வருகிறது என்றே சொல்லலாம்.
வடிவேலு ஒரு படத்தில் உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் என்று தேங்காய் விற்க பாடுபடுவது போல் காங்கிரஸ் கட்சியை ஒரு வழி செய்ய திமுக யோசித்து வருகிறதாம். இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்கினாலும் அந்த அந்த மாநில கட்சிகளும் காங்கிரஸுக்கு குறைந்த தொகுதியே கொடுத்து டீல் செய்து வருகிறது. அப்படி இருக்கையில் தமிழகத்திலும் திமுக அப்படி செய்ய முனைப்பு காட்டி வருவதாக சில தகவல் வெளியாகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகப்படியான சீட் கேட்டது. ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் உங்களு கொடுத்த இடத்தில வெற்றி பெற்றிருந்தால் நான் இப்பொது எதிர்கட்சியக இருக்க மாட்டேன் என கூறி குறைவான தொகுதி கேட்டது.
முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சி பெரிய லிஸ்ட்டை கொடுக்க அதெல்லாம் வேண்டாம் இந்த முறை நாங்கள் சொல்வதை கேளுங்கள் என 7 என்ற தோனியின் நம்பரை எடுத்து கொள்ளுங்கள் என முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாம். அதன் பிறகு காங்கிரஸ் தலைமைக்கு இதனை தெரிவிக்க காங்கிரஸ் தலைமை மல்லிகார்ஜூன் கார்க்கே தமிழ்கத்திக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால், அது அப்படியே தள்ளிப்போனது. ஆனால், தமிழ்நாடு கணிரெஸ் பொறுத்தவரை கந்த முறையை விட 12 தொகுதிகளை கேட்க திமுக அது எல்லாம் முடியாது ஏன் சொல்ல 7 தொகுதியில் யாரை நிக்க வைக்க போறீங்க என கேட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்காமல் போக அதிமுக பக்கம் செல்லலாம் என கூறிய நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பிளவு ஏற்பட்டு தலைமையை மாட்டிவிட்டது காங்கிரஸ் தலைமை.
தேசிய கட்சிக்கு இப்படி தான் மரியாதை கொடுக்குமா திமுக என சில காங்கிரஸ் தலைவர்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளார்களாம். அவர்கள் எந் நேரத்திலும் மாற்று கட்சியை நோக்கி போகலாம் என கூறப்படுகிறது. கடந்த முறை போட்டியிட தொகுதியாவது கொடுங்கள் என கேட்டபோது அதற்கும் ஒத்து வராமல் இருக்கிறதாம் திமுக. தமிழகத்தில் காங்கிரசை எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.