![mkstalin, savuku shanker](https://www.tnnews24air.com/storage/gallery/GA88rAFeD8Skm8IEgUS2Ul3KAGJ5iDSUUXgnHhXc.jpg)
நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் குறித்த அறிவிப்புகள் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என்றும் தேர்தலுக்கான அட்டவணைகளும், கடந்த முறை போன்று தேர்தல் ஒன்பது கட்டங்களாக ஓட்டு பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது அரசியல் கட்சிகளிடையே ஒரு பரபரப்பையும் மேலும் ஒரு உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் தேர்தல் குறித்த நாட்கள் குறைந்து கொண்டே வருவதால் ஒவ்வொரு கட்சியும் அதனை தீவிரமாக கையில் எடுத்து தேர்தலுக்கான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தொகுதி குறித்த பேச்சு வார்த்தைகள், ஒரு பக்கம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள், வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் என பல நடவடிக்கைகள் ஆங்காங்கே பல கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதும் செய்திகளில் வெளியாகி வருகிறது இந்த நிலையில் தமிழகத்தின் ஆளும் தரத்திற்கு மிகவும் தலைவலியான பிரஷரான ஒரு காலகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அமைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால் தமிழகத்தில் திமுகவிற்கு சாதகமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சியை எடுத்ததிலிருந்து அரசுக்கு எதிராக மக்களும் அரசு ஊழியர்களும் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு பெயரில் கோவில்களின் சொத்துக்களை ஒரு பக்கம் முடக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் அரசை நோக்கி முன்வைக்கப்படுகிறது. அதோடு அரசாங்கத்தின் தலையிட்டாலே கரூர் கோவை போன்ற பகுதிகளில் உள்ள ரவுடிசம் நடைபெறுவதாகவும் வசூல் கட்டப்பஞ்சாயத்து என அனைத்தும் நடைபெறுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.இதற்கிடையில் திமுக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து அதனால் தற்போது இருவர் தங்களது பதவியை இழந்துள்ளதும் திமுக ஆட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது அது மட்டும் இன்றி மூத்த எம்பி மற்றும் திமுக நிர்வாகிகளும் மக்களிடையே பேசும் பொழுது அராஜகத்தையும் அலட்சியத்தையும் காட்டும் வகையில் பேசிய பேச்சுக்கள் ஒவ்வொன்றுமே மக்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்தது இதனால் திமுக மூத்த அமைச்சர்கள் எவரையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னிறுத்த முடியாத சூழ்நிலையையும் சந்தித்துள்ளது.
இதற்கேற்றார் போல் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் உடல்நிலையும் கடந்த சில மாதங்களாக சரியில்லை! முதல்வரின் நடை மற்றும் பேச்சு அனைத்திலும் நடுக்கம் இருப்பதாகவும் அவரது கையும் அதிக நடுக்கத்தை கொண்டுள்ளதையும் முதல்வரின் வீடியோக்கள் வெளிவரும்போது பார்க்க முடிந்தது. மேலும் பிரபல அரசியல் விமர்சிக்க சவுக்கு சங்கர் முதல்வருக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் அதற்கு குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சில பரிசோதனை சிகிச்சைகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். இது சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. ஏனென்றால் அரசியல் விமர்சனம் சவுக்கு சங்கரின் இந்த கருத்திற்கு ஏற்றபடி தமிழக முதல்வர் பெரும்பாளான அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறாமல் தனது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையே கலந்து கொள்ள வைத்தார். முதல்வர் கலந்து கொள்ள வேண்டிய பாதி நிகழ்ச்சிகளில் உதயநிதி கலந்து கொண்டு வருவதும் தற்போது வரை வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பான தகவலை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார், தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சவுக்கு சங்கர் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பிரச்சாரங்கள் அனைத்தையும் முதல்வர் மேற்கொள்ளப் போவதில்லை உதயநிதி தான் மேற்கொள்வார் அவரது தலைமையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை பாதிப்பில் இருந்த பொழுது எப்படி பெருவாரியான பிரச்சாரங்களில் அவர் ஈடுபடாமல் குறிப்பிட்ட ஒன்று இரண்டு பிரச்சாரங்களை மட்டும் கலந்து கொண்டார் அதேபோன்றுதான் தற்போது முதல்வரும் சில குறிப்பிட்ட பிரச்சாரங்களை மட்டுமே தலை காட்டுவார் என சவுக்கு சங்கர் கூறியுள்ளது திமுக தொண்டர் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கடந்த சில மாதங்களாகவே அறிவாலயத்திற்கு வராத தலைவரே பிரச்சாரத்திலாவது பார்த்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தொண்டர்களுக்கு இந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.