கடந்த மாதத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது இதில் மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜக தனது வெற்றியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களுமே காங்கிரஸ் வசம் இருந்தது, காங்கிரஸிடம் இருந்து அந்த இரண்டு மாநிலங்களை தட்டி தூக்கி தன் ஆட்சியை உறுதி செய்துள்ளது பாஜக. இதனால் தேசிய அளவிலான கட்சிக்குள் பெருத்த ஏமாற்றமும் தோல்விக்கு காரணமாக பழி போட்டுக் கொள்ளும் சண்டைகளும் நிகழ்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த தோல்வியானது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்க படுகிறது. மேலும் I.N.D.I கூட்டணியில் உள்ள திமுகவிற்கும் I.N.D.I கூட்டணிக்கும் இடையே ஏற்கனவே உதயநிதியின் சனாதன பேச்சால் ஏற்பட்ட விரிசல் இன்னும் தீவிரமடைந்து உள்ளது. ஏனென்றால் உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு வடமாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை பெற்றது எதிர்ப்புகளையும் பெற்றிருந்தது பாஜகவின் மூன்று மாநில வெற்றிக்கு சனாதனத்தை எதிர்ப்பதாக கூறும் ஒருவரை I.N.D.I கூட்டணி தம்மிடம் வைத்துக் கொண்டிருந்தது தான் காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜகவின் இந்த வெற்றி தமிழகத்தில் திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருமாவளவன் தற்போது வேலையை காட்டத் தொடங்கியுள்ளார் குறிப்பாக திமுகவை எதிர்த்து திருமாவளவன் கட்சியை சேர்ந்த விழுப்புரம் எம்பி ரவி குமார் சில தகவலை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் 2020ல் எஸ்சி மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 1274 எனவும், 2021ல் 1377 எனவும் 2022 ஆம் ஆண்டில் எஸ்சி மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளின் எண்ணிக்கையானது 1761 இன்று என்சிஆர்டி அறிக்கை தெரிவிக்கிறது எனவும் கூறினார் மேலும் 2022 ஆம் ஆண்டில் மட்டும் எஸ்சி சமூகத்தவரின் படுகொலை 56, எஸ் சி பெண்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 என்றும் இதில் 50 பேர் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 118 பேர் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமியர்கள் என்றும் தகவலை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இந்திய அளவிலும் எஸ் சி மக்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கையானது 2020 - 50,291, 2021 - 50,900, 2022 - 57,582 என்ன தெரிவித்து வருடம் கடந்து செல்ல செல்ல எஸ்.சி மக்களுக்கு எதிரான குற்றங்களும் வன்கொடுமைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இந்த நிலையில் 2022 இல் எஸ்சி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் விகிதமானது 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் உள்ள எஸ்சி மக்களுக்கு மீதான வன்கொடுமைகள் மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறினார்.
இதன் பின்னணியை விசாரித்த பொழுது ஐந்து மாநில தேர்தல்களில் பெரும்பான்மையாக பாஜக வெற்றி பெற்றதால் இனி திமுக வேலைக்காகாது திமுகவையே I.N.D.I கூட்டணியில் இருந்து துரத்தி விடுவார்கள் போலிருக்கிறது எனவே நாம் அதிமுக பக்கம் சென்று விட திருமாவளவன் தரப்பில் நினைத்ததாகவும், தற்பொழுது திருமாவளவன் அதற்கான வேலையை தொடங்கி விட்டதாகவும் எனவும் அதன் காரணமாகத்தான் திருமாவளவன் கட்சி எம்பி ரவிக்குமார் இதுபோன்று பேசி இருக்கிறார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் 4 தொகுதிக்கு அதிமுகவிடம் திருமாவளவன் தூது விட்டதாகவும் வேறு சில பேச்சுக்கள் எழுந்துள்ளது.