24 special

அறிவாலயத்துடன் அடம் பிடிக்கும் காங்கிரஸ்... முட்டு கட்டை போடும் திமுக...? நடக்கப்போகும் அதிரடி மாற்றம்!

Dmk, Congress
Dmk, Congress

நாடாளுமன்ற தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்கத்தில் உள்ள கட்சிகள் அக்கட்சியின் செயல்பாடுகளில் குறிக்கோளாக பணிகளை செய்து வருகின்றனர். அரசியல் களம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரும் தொகுதி பங்கீட்டை எதிர்பார்த்து வருகின்றது. இன்று தொகுதி குறித்து காங்கிரஸ் பட்டியலை கொடுக்கவுள்ளது. ஆனால், திமுக அதில் குறிப்பிட்ட தொகுதி மட்டுமே கொடுக்கவுள்ளது என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதிமுகவும் நாளை முதல் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கவுள்ளது. பாஜகவும் தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் திமுக இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழு பங்கேற்க உள்ளது. திமுகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் எந்த எந்த தொகுதி வேண்டும் என்று பட்டியலும் தயாரித்துள்ளனர்.

அதன் படி, திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் உட்பட மொத்தம் 21 தொகுதிகளுக்கான பட்டியலை காங்கிரஸ் கொடுத்து முக்கியமாக 12 தொகுதிகளை கேட்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் 12 தொகுதிகளை கொடுப்பதில் திமுக உடன்பாடு இல்லை என்றும் 3 தொகுதிகள் மட்டுமே கொடுக்க வாய்ப்புள்ளதாக திமுகவை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் 12 தொகுதி கொடுக்கவில்லை என்றால் கொடுக்கும் தொகுதி தொடர்பாக போட்டியிடும் தொகுதியை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபக்கம் அரசியல் விமர்சகர்களால் காங்கிரஸுக்கு மூன்று தொகுதிகள் திமுக கொடுத்தால் கூட்டணியில் இருந்து விலகி அதிமுக பக்கம் செல்லலாம் என தகவல் தெரிவிக்கின்றனர். அப்படி நடக்குமே தவிர காங்கிரஸ் தினைத்து தமிழகத்தில் நிற்காது. பாஜக தவிர தேசிய கட்சிகள் பெரியதாக வளரவில்லை தமிழ்நாட்டில். அதிமுகவுடன் பொன்னால் 21 தொகுதி கொடுக்க தயாராக இருப்பார் ஆனால், அதன் மூலம் ஒரு பயனும் இல்லை என்றும் திமுக கொடுக்கக்கூடிய 3 தொகுதியை வைத்து ஓன்றாக பயணிக்கும் என கூறுகின்றனர். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கை கொண்ட தொகுதி மட்டுமே கொடுப்பதில் உறுதியாக உள்ளதாம். இன்று நடக்கும் கூட்டத்தில் தெரியும் தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் ஒன்றாக இணைந்து பயணிக்க உள்ளதா இல்லை மற்ற கட்சிகளுடன் இணைந்து பயணிக்க உள்ளதா என்பது பொறுத்திருந்து பாப்போம்.

இதற்கிடையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய விசிக சார்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற சனநாயகம் வெல்லும் மாநாட்டில் விசிக தனது பலத்தை நிரூபித்து இருந்தது. இதனால் கடந்த முறை இரண்டு சீட் கொடுக்கப்பட்டது அதில் ஒன்று விசிக சின்னம் சார்பாகவும் திமுக சார்பாகவும் வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த முறை விசிக நான்கு தொகுதிகளை குறிவைத்து கேட்கவுள்ளதால் அரசியல் களம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்பது தெரியவருகிறது.