Cinema

விஜயினால் இந்த நிலைமையா சூப்பர்ஸ்டாருக்கு...?

Rajinikanth Vijay
Rajinikanth Vijay

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது, அந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தளபதி குறித்தும் தல குறித்தும் பேசியது ஒட்டு மொத்த அரங்கத்தையும் அதிரவைத்தது. இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வார்த்தைகள் உற்று நோக்கப்பட்டது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். இரண்டு ரசிகர்களிடம் தொடரும் பஞ்சாயத்து இனி ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக விஜய் உள்ளார் என்றும் அவரது படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜேயிலர் படம் மட்டுமே சமீபத்தில் வியாபாரம் ஏற்படுத்தி கொடுத்தது எனவும் அதற்கு முன்னாள் வெளியான படம் சரியாக போகவில்லை எனவும் பேசப்படுகிறது. ரஜினியை விட விஜய் படம் முதல் இடத்தில்  உள்ளதாகவும் கமல், அஜித் போன்றவர்கள் படம் வெளியாகாமல் இருப்பதால் விஜய்க்கு மார்க்கெட் அதிகரித்துள்ளதாக தாயாரிப்பாளர்களே கூறுகின்றனர். 

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் சுமார் 550 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுவது, ஜெயிலர் பட ஆடியோ வெளியீடு விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையினால் தான் படம் ஓடியதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகவுள்ள லால் சலாம் படம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஒன்னும் இல்லை என சினிமாவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ரஜினியின் சினிமா வாழ்கை குறைந்துவிட்டதாகவும் விஜய் நடித்து வரும் கோட் படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

இதற்கிடையில் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது பேசிய ரஜினிகாந்த், 'காக்கா கழுகு கதையை நான் விஜய்யை நினைத்து சொல்லவில்லை. நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய். ரஜினிக்கு போட்டி ரஜினிதான். விஜய்க்கு போட்டி விஜய்தான். ரசிகர்கள் இப்படி மோதிக்கொள்வது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு திரைத்துறையில் வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கியமாக இந்த பேச்சு விஜய் - ரஜினி ரசிகர்களிடையே இருக்கும் மோதல் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக ரஜினி ஆரம்பித்த கதை தான் விஜய் விளக்கம் கொடுத்திருந்தார். அதன் பிறகு லெஜண்ட் சரவணனும் இந்த குட்டி கதை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இது இப்படியே போகையில் ரஜினிகாந்த் இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைத்தார் அந்த ஆடியோ வெளியிட்டு விழாவில். இந்நிலையில், ஜினியின் பேச்சு குறித்து பேசியிருக்கும் வலைப்பேச்சு அந்தணன், "ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு பெரிய கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. இந்த பக்குவமான பேச்சுக்கு பின்னால் சுய லாபங்கள் இருக்கலாம். ஆனால் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களின் கோபத்தை தணித்திருக்கிறது. ஜெயிலர் பட ஆடியோ லான்ச்சில் ரஜினிகாந்த் காக்கா - கழுகு கதையை சொன்னதால்தான் அவ்வளவு பெரிய ஓபனிங் படத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.

ரஜினியின் அந்தப் பேச்சுக்கு பிறகுஅ வரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரொம்பவே தாக்கினார்கள். முக்கியமாக ரம்பா விளையாட்டாக ஒரு சொன்ன விஷயத்தை ரஜினி ரசிகர்கள் குறிப்பிட்டே பெரிதாக்கினார்கள். அதனை பார்த்து ரஜினி கண்டிப்பாக மன உளைச்சல் அடைந்திருப்பார். இனியும் விஜய் ரசிகர்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் மோதல் இருக்கக்கூடாது என்பதால்தான் அவர் இப்படி பேசியிருப்பார்" என்றார்.