24 special

டெல்லியில் இருந்து வந்த செய்தி... முந்திக்கொண்டு பானையை உடைத்த திமுக!

m.k.stalin,Supreme Court
m.k.stalin,Supreme Court

இந்தியா முழுவதும்  ஒரு கட்சியை ஒட்டுமொத்த நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் சேர்ந்து எதிர்த்து கொண்டு இருப்பது 2023 ஆண்டில் ஆரம்பித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்தியாவில் உள்ள 28 அரசியல் காட்சிகள் ஒன்றாக இணைந்து I.N.D.I.A என்ற பெயரில் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்ற ஒரு புது கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாக பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க கூடாது என்பதை கொண்டது, மேலும் பாஜகவை ஒட்டுமொத்தமாக எதிர்த்து வந்தது! இந்த கூட்டணியை முதன் முதலில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்து அதன் முதல் கூட்டத்தையும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அன்று பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற ஏற்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும், மும்பையில் மூன்றாவது கூட்டம், புதுடெல்லியில் நான்காவது கூட்டம், ஐந்தாவது கூட்டம் மெய்நிகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


நாட்டின் முக்கிய காட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் இணைந்திருக்கும் இந்த கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த திமுக கூட்டணி அமைத்து இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு திமுகவால் I.N.D.I.A கூட்டணியில் ஏற்பட்ட இடைஞ்சல்கள் மற்றும் தோல்விகள் பெரிதாக  இருந்தது ஏனென்றால் தமிழக முதல்வரின் மகனும் அமைச்சருமானம் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அவதூறாக பேசியது மட்டுமின்றி சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியது நாடு முழுவதும் எதிர்ப்பை பெற்றதை அடுத்து I.N.D.I.A கூட்டணியிலும் எதிர்ப்பை பெற்றது. அதுமட்டுமின்றி சனாதன எதிர்ப்பு I.N.D.I.A கூட்டணி 5 மாநிலங்களின் தேர்தலில் தோல்வியை தழுவுவதற்கும் காரணமாக அமைந்தது. இதனை அடுத்து திமுகவின் எம்பிகள் பாஜகவினரை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த வட இந்தியரை விமர்சித்து பேசியதும் I.N.D.I.A கூட்டணியில் எதிர்ப்பை பெற்றது. இதனால் 

திமுகவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று I.N.D.I.A கூட்டணியின் மற்ற முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதும் அதனால் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்க இருந்த I.N.D.I.A கூட்டணியின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதும் திமுகவை பதட்டத்தில் தள்ளியது. அதோடு I.N.D.I.A கூட்டணி தலைமை கூட்டணியில் இருந்து திமுகவை தூக்கி விடலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டுள்ளதாக டெல்லியில் இருந்து அறிவாலயத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 15 சீட்டு கேட்போம் என்று காங்கிரஸ் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எப்படியும் இனி காங்கிரஸ் உடன் பயணித்தால் வேலைக்காகாது! காங்கிரசு 15 தொகுதி கேட்டு I.N.D.I.A கூட்டணி நம்மளை நிராகரித்தால் அது தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும்! நம்மை அவர்கள் அனுப்பிய மாதிரி இருக்க கூடாது நம்மளே அவங்கள அனுப்புனது மாதிரி இருக்கணும் என்று அறிவாலயம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியில் என்ன என்றால் சீட்டு வாங்குவதற்காக கட்சியை நடத்துவது, அதில் என்ன பிரயோஜனம் உழைக்க வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கட்சியை நடத்த வேண்டும் ஆனால் அப்படி நடத்தாமல் பிறகு தேர்தல் சமயத்தில் வந்து எட்டிப் பார்ப்பது...இது மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை! மேலும் எங்களிடம் அவர்கள் ஆட்டம் போட முடியாது, நாங்க எல்லாம் ஓலையை கட்டி அடிப்போம்! என்று திமுக பொது மேடையில் பேசியது திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவடையும் என்பதை உறுதிப்படுத்துகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.