24 special

நடிகை குஷ்புவுக்கு ஆதரவு குரல் கொடுத்த காங்கிரஸ் கட்சி!....செம்ம மாஸ் போடு!

Kushboo, Congress
Kushboo, Congress

நடிகை குஷ்பு 'சேரி' என பதிவிட்ட வார்த்தைக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு கண்டனம் தெரிவித்து, அவர்கள் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ தற்போது பாஜக கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். நடிகர் மன்சூர் அலிகான் குறித்து பேசிய விவகாரத்தில் ட்வீட் செய்தார் குஷ்பூ அப்போது எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதில் கூறுகையில் ’திமுக குண்டர்கள் இத்தகைய மோசமான பாஷையைத் தான் பயன்படுத்துவார்கள். அதுதான் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது மன்னிக்கவும். என்னால் உங்களைப் போல, சேரி மொழியில் பதிலளிக்க முடியாது’ என தெரிவித்தார் இதற்கு காங்கிரஸ் கட்சியினர்  கடும் கண்டனம் தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தான் பேசியதில் தவறு ஏதும் இல்லை என நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அவரது வீட்டின் முன்பு குஷ்பூ உருவப்படத்தை அவமதித்தனர்.

அவரது வீட்டிற்கு காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மொத்தமாக நடிகை குஷ்பூக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற எம் எல்ஏவும்மான., இளங்கோவன் குஷ்பூக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரோட்டில், பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ., செய்தியாளர்களிடம் சந்திப்பில் " நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் நிச்சயமாக 4  மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், குறிப்பாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என தெரிவித்தார். "நடிகை குஷ்பு சேரி சம்பந்தமாக பேசியது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு இளங்கோவன் கூறும்போது, நான் அதைப்பற்றி ஒண்ணும் கூற விரும்பவில்லை. எனக்கு ஒன்றும் அதில் தப்பாக இருப்பதாக தெரியவில்லை".

இருந்தாலும் எனக்கு அவருடைய பேச்சின் முழு விவரம் தெரியவில்லை என்று பதிலளித்தார். காங்கிரஸ் கட்சி மொத்தமாக எதிர்க்கும் நிலையில் இளங்கோவன் மட்டும் ஆதரவு குரல் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசியல் விமர்சகர்களால் கூறப்படுவது குடிநீர் தொட்டியில் மலம் கலந்த போதும், விவசாயிகள் மீது குண்டாஸ் பாய்ந்த போதும், தென் மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்களை துன் புறுத்தியபோது காங்கிரஸ் கட்சி எங்கே சென்றது என்ற காங்கிரஸ் கட்சியை சேந்த அரசியல் விமர்சகர்களால் கருத்து தெரிவிக்கப்படுள்ளது.