Cinema

சென்னையில் 21-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது... தமிழ் போட்டிப் பிரிவில் 12 படங்கள் தேர்வு...!

awards function
awards function

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் நடக்கும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்படவிழாவின் பொதுச்செயலாளர் தங்கராஜ் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட ஜூரி உறுப்பினர்கள் தலைமையில் திரைப்படவிழா மற்றும் அதில் திரையிடப்படும் திரைப்படங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும் .


அதன்படி, 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளது. இம்முறை இந்தத் திரைப்பட விழாவில் 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், உலகம் முழுக்க தேர்வான படங்கள் பட்டியலுடன் தமிழ் படங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.டிசம்பர் 14 முதல் துவங்கி டிசம்பர் 21 வரை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியானது ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் திரையிடப்படவுள்ளன.. இவ்விழாவில் இந்த திரைப்படங்களில் தமிழ் படங்களில் 25 படங்கள் அனுப்பப்பட்டு அதிலிருந்து சிறந்ததாக 12 படங்களும், உலக சினிமாவில் 12 படங்களும் , இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளது

அந்த வகையில் வசந்தபாலனின் 'அநீதி', மந்திரமூர்த்தியின் 'அயோத்தி', .தங்கர் பச்சனின் 'கருமேகங்கள் கலைகின்றன',  மாரி செல்வராஜின் 'மாமன்னன்'  விக்னேஷ் ராஜா டி, செந்தில் பரமசிவம் ஆகியோரின் 'போர் தோழில்'  விக்ரம் சுகுமாரனின் 'ராவண கோட்டம்'  அனிலின் 'சாயவனம்', பிரபு சாலமனின் 'செம்பி', சந்தோஷ் நம்பிராஜனின் 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்' கார்த்திக் சீனிவாசனின் 'உடன்பால்' வெற்றிமாறனின் 'விடுதலை' அமுதவாணனின் 'விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3' ஆகிய 12 தமிழ் படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனமேலும் சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளில் இருந்து  500 க்கும் மேற்பட்ட படங்கள் இந்த திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டு அதில் இருந்து ஜூரி மூலமாக 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டு  திரையிடப்பட இருக்கிறது.

 உலக சினிமாவில் தேர்வான 12 படங்களில் 2 படங்கள் இந்தியாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வேணு யெல்தண்டி இயக்கியுள்ள பாலகம் திரைப்படம்,  மலையாளத்தில் பாபு திருவல்லா எழுதிய, மனம்  திரையிடப்படவுள்ளது.அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் தேர்வான 12 படங்களில் இருந்து 3 படங்கள்  சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டு முதல் 3 இடங்களை பெறும் படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் பரிசு  மற்றும் உலக சினிமாவில் சிறந்த 3 படங்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.2022 அக்டோபர் 16முதல் 2023 அக்டோபர் 15 வரை சென்சார் செய்யப்பட்ட படங்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் போட்டிக்கு அனுப்பப்பட்ட 25 தமிழ்ப் படங்களிலிருந்து 12 படங்கள் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் போட்டிப்பிரிவில் திரையிடத்தேர்வாகியுள்ளன.மேலும் இந்த திரைப்பட விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு வெளிநாட்டு தூதரகங்கள், இயக்குனர்கள், திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்த திரைப்படங்களின் தேர்வுக்கு தமிழ் படங்கள் அனுப்ப கட்டணம் ஏதுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.