
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படம் பாஜக பக்கம் திரும்பும் என எதிர்பார்த்த ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கூட்டணியைப்பிளவை உண்டு பண்ணியுள்ளது பராசக்தி திரைப்படம்,. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள, அந்த திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்வினை தெரிவித்து வருகின்றனர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருச்சி வேலுசாமி, பராசக்தி படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திருச்சி வேலுச்சாமி பேசியதாவது:-
இன்றைக்கு கூட ஒரு திரைப்படம் வந்துள்ளது. அந்த திரைப்படத்தை தயாரிப்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சி, அந்த திரைப்படத்தில் உள்ள வசனம் பற்றி சொன்னார்கள். காங்கிரஸ்தான் இந்தியை திணிக்கிறதாம். இவர்கள்தான் எதிர்க்கிறார்களாம். அந்த இந்தி எதிர்ப்பு என்பதை இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனக்கு இந்தி தெரியாது. இங்கு இருக்கும் பலருக்கும் இந்தி தெரியாது. ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியில் படித்து பட்டம் பெற்றுள்ளாரா? இல்லையா? அந்த குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞர் மத்திய அமைச்சராக இருந்த போது, எப்படி இவ்வளவு சிறப்பாக பணியாற்றினார் என்று கேட்ட போது, அவருக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாக தெரியும். ஆகவே, அவருக்கு மரியாதை இருக்கிறது என்று சொன்னாரா இல்லையா?
ஊரிலேயே இருக்கிறவரை எல்லாம் அம்மா என்று அழைக்க முடியாது... மாதாஜி என்றுதான் அழைக்க முடியும். அப்பா என்று அழைக்க முடியாது; பிதாஜி என்றுதான் அழைக்க வேண்டும் என்று ஊருக்கு சொல்லிவிட்டு, தன் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லோருக்கும் இந்தி கற்றுக்கொடுத்துள்ளனர்.
இந்தி இந்த நாட்டின் ஆட்சி மொழியாக வராமல் தடுக்கப்பட்டதற்கு ஒரே காரணம் சஞ்சீவ் ரெட்டி. அரசியல் நிர்ணய சபையில் ஆட்சி மொழி எது என்று விவாதம் நடைபெற்றது. அப்போது சரி சமமாக வாக்குகள் வந்தன. அந்த நேரத்தில் சஞ்சீவ் ரெட்டி தன்னுடைய வாக்கை இந்திக்கு எதிராக செலுத்தியதால்தான், அரசியல் சட்டத்தில் இந்தி ஆட்சி மொழியாக வராமல் தடுக்கப்பட்டது.
ஆகவே, எதை உயிர்க்கொள்கை என்று நீங்கள் படமெடுக்கிறீர்களோ, அந்த உயிர்க்கொள்கை இந்தியை ஆட்சி மொழியாக வராமல் தடுத்த சஞ்சீவ் ரெட்டி ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது, ஆயிரம் இருந்தாலும் விவேக் கிரியைப் பார்ப்பனார்... சஞ்சீவ் ரெட்டி நம்ம ஆள்... நம்ம ஆள் என்பது மட்டும் இல்லை... இந்தி ஆட்சி மொழியாகாமல் தடுத்தவர் என்று பெரியார் சொன்ன போது, அன்றைய முதல்வர், தந்தைக்கு வயதாகிவிட்டது; ஏதோ பிதற்றுகிறார் என்றார்.1967 வரை தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தமிழ்தான் பாட மொழியாக இருந்தது. அதற்கு பிறகு ஆங்கிலம் வருவதற்கு காங்கிரஸ் காரணமா இல்லை... அதற்கு பின்னால் வந்த திராவிட இயக்கங்கள் காரணமா? ஆக, சொல்வதற்கும் செயல்படுவதற்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இது கூட்டணிக்குள் பெரும் புயலை வீசியுள்ளது. இது தொடர்பாக திமுகவினர் வேடிக்கை தான் பார்த்து வருகிறார்கள். தேவை இல்லாத வேலையை உதயநிதி செய்துவிட்டார். இப்பொது இந்தி எதிர்ப்பு எடுபடாது என தெரிந்தும் ஏன் இந்த வேலையை பார்த்தார் என ஸ்டாலினிடம் புலம்பி வருகிறார்களாம்.
