நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டம் போட்டு வருகின்றனர். இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் திமுகவுடன் பயணிக்கும் விசிக கட்சிக்கு இழுபறி நடந்து வருவதாக சில தகவல் வந்துள்ளன. அதாவது, திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் தொகுதி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. விசாரிக்க இருமானதாக இருப்பதாக கூறப்படுகிறது. இது திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தொகுதி பங்கீடுகள், கூட்டணி என மும்முரமாக இருந்து வருகின்றன. இதில் திமுகவுடன் கூட்டணி வகிக்கும் விசிக கட்சி 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு கேட்டு வருவதாக தெரிகிறது. நான்கு தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டும் விசிக தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கான பானை சின்னத்தை ஒதுக்க கேட்டு வாங்கி வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக இரண்டு இடங்களை ஒதுக்கியது அதில் ஒன்று பானை சின்னத்திலும், மற்றொன்று உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். கடந்த முறை பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருமாவளவன் தற்போது தொகுதி மாறுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிதம்பரம் தொகுதியிலேயே போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். கடந்த வாரம் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்தியன் முஷ்லீம் லீக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி முறையே ஒவ்வொரு தொகுதி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் போட ஏற்பாடு நடந்து வந்தது. இதில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை தலைவர் மல்லிகார்ஜூன் கார்க்கே சந்தித்த 11 தொகுதிகளை திமுகவிடம் கேட்பதாக சில தகவல் வந்தன. இன்று இரண்டு மார்க்சிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கியது. காங்கிரஸ் கேட்கும் தொகுதியை திமுக கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, திமுகவை பொறுத்தவரை ஒற்றை இலக்கு கொண்ட தொகுதி கொடுப்பதாக சில தகவல் வந்தது.
இது ஒருபக்கம் இழுபறி என்றால், விசிக ஒரு பக்கம் 4 தொகுதிகளில் நின்று வருகிறது. இதுவரை அண்ணா அறிவாலயத்தில் மற்ற கூட்டணி கட்சிகள் பேச்வரத்தை சுமுகமாக முடிந்த நிலையில், நேற்று விசிகாவுக்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது திருமாவளவன் செல்லுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், விசிக்காவில் இருந்து யாரும் செல்லவில்லை. காரணம் திமுக கடந்த முறை கொடுத்தது போல் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாகவும் அதிலும், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என கண்டிஷன் போடுவதாக தெரிகிறது.
இல்லை அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கடைசியாக விசிக சென்று கேட்கும் தொகுதியை திமுகவிடம் பெறலாம் என நினைக்கிறதா என தெரியவில்லை. பாமக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தவுடன் விசிக அதன் நடவடிக்கையை மேற்கொள்ளும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. திமுக விசிகவுக்கு 4 தொகுதியா அல்லது இரண்டு தொகுதியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.