24 special

திரையுலகில் இருந்து அண்ணாமலைக்கு ஆதரவாக முதல் குரல்...

ranjith, annamalai
ranjith, annamalai

திரை துறையையும் அரசியலையும் ஏறத்தாழ ஒரு விஷயத்தில் ஒத்துப் போவதை நாம் பார்க்கலாம்! எதில் என்றால்?  குடும்பம் குடும்பமாக சினிமாவில் பிரபலமாகிறாரகளோ தமிழக அரசியல் மட்டும் இன்றி தேசிய அளவில் தொண்டு தொட்டு தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் இருந்தால் அவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பார்கள் அப்படி குடும்ப அரசியலை அதிகமாகக் கொண்டது இந்திய அரசியல், இருப்பினும் எப்படி திரை உலகில் கடந்த சில வருடங்களாக புதிய நபர்கள் மற்றும் திரை உலகப் பின்புலம் இல்லாதவர்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்களோ அதே போன்று தற்போது அரசியலிலும் எந்த அரசியல் பின்புலமும் சிபாரிசும் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரு நோக்கத்தை மட்டும் கொண்டு சிலர் அரசியலில் இணைந்து நேர்மையான வழியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.


இதில் ஒருவர் தனது ஆசை கனவை விடுத்து விட்டு மக்களின் சேவையில் இறங்கி தற்போது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்று வருகிறார் என்றால் அது அண்ணாமலை! எளிதாக கூறப்போனால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவார்கள் அரசியல் பின்புலம் இருந்தால் அரசியலுக்கு வருவார்கள் அல்லது குடும்ப அரசியலைக் கொண்டவர்கள் ஒவ்வொரு தலைமுறையாக அரசியலில் இருந்து வருவார்கள், அரசியல் என்றால் இப்படித்தான் இதுதான் என்று வரைமுறைகளை இட்டு வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அந்த வரைமுறைகள் அனைத்தையும் இடித்து நொறுக்கும் வகையிலும் தற்போது தனது நீண்டகால முயற்சியால் கிடைத்த காவலர் பொறுப்பை விடுத்து விட்டு பாஜகவில் இணைந்து தமிழகத்தில் பாஜகவை மாநில தலைவராக திறம்பட செயலாற்றி வருகிறார் அண்ணாமலை. தேசிய அளவில் மட்டும் தனது செல்வாக்கையும் மக்களின் ஆதரவையும் பெற்று வந்த பாஜக தமிழகத்தில் என்று அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்கப்பட்டாரோ அன்றிலிருந்து தமிழகத்தில் பாஜகவை வளர்த்தே ஆக வேண்டும் என்று குறிக்கோளுடன் தமிழக பாஜக செயல்பட்டு தமிழகம் முழுவதும் தற்போது அந்த குறிக்கோளை சாதித்துள்ளது தமிழக பாஜக! 

இதற்கு முக்கிய காரணம் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையும் அவரது செயல்பாடுகள். மேலும் அவர்  பத்திரிகையாளர்கள் மத்தியில் முன்வைக்கும் கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கும் கேள்விகள் அதற்கு தகுந்த ஆதாரங்களையும் முன்வைத்து மக்களின் ஆதரவை பெற்ற வருகிறார். இதனால் பல இளைஞர்கள் மகளிர் மற்றும் மாணவர்கள் கூட அண்ணாமலை பக்கம் திரும்பி இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியையும் இப்படி நாங்கள் பார்க்கவில்லை அவர் கூறும் கருத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் மூலம் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறுகின்றனர். இப்படி சாமானிய மனிதர்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொண்ட அண்ணாமலை தற்போது பிரபலங்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை உயர்த்தி வருகிறார் அதன்படி நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலையை பாராட்டியும் அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பேசியுள்ளார். 

அதாவது அண்ணாமலையின் செயல்பாடு நன்றாக இருக்கிறது, அதிகமாக பேசுகிறார் பலவற்றை வெளிக்கொண்டு வருகிறார் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் அப்பொழுதுதான் அவரது செயல் திறன் நமக்கு புரியும் அப்பொழுது தான் மக்களுக்கு அவர்கள் நன்மை செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும், நல்லது செய்வேன் என்று நானே கூட கூறலாம் ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு வாக்களித்து எனக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அதை என்னால் செயல்படுத்த முடியும் அதேபோன்றுதான் அண்ணாமலையும்! ஒரு திறமையான ஐபிஎஸ் அதிகாரி, தைரியமாக இறங்கி மக்களுக்கு சேவையாற்றியவர், அப்படிப்பட்ட ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால் அது ஒரு சிறந்த அடிப்படைதானே...என ரஞ்சித் கூறியுள்ளது இணையங்களில் வைரலாகி வருகிறது.