24 special

சித்தர்களின் தலைமை குருவால் அமைக்கப்பட்ட சிவாலயம்! அதிசயங்கள் நிறைந்த மர்மம்...

shivan temple
shivan temple

சிவன் கோவில் என்றாலே தனிச்சிறப்பையும் பல மர்மங்களையும் கொண்டது ஏனென்றால் சிவன் அங்கு எழுந்தருவதற்கு ஒரு வரலாறும் அதிசியமான புராண கதைகளும் இருக்கும். அப்படி ஒரு அதிசயமான மற்றும் பிரமிக்க வைக்கும் கோவிலாக தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது அந்த கோவிலுக்கு அடுத்த படியான ஒரு கோவிலாக தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள தென்பொன்பரப்பி என்ற பகுதியில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் புகழ்ந்து போற்றுகின்றனர். ஏனென்றால் இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் நவபாசனத்திற்கு நிகரான சூரியகாந்த தன்மையை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட லிங்கம் என்றும் சுமார் 5.5 அடி உயரத்திற்கு பிரம்மா மற்றும் விஷ்ணுவின் பீடங்கள் மீது கம்பீரமாக காட்சியளிக்கிறது. உலகத்தையே கட்டி ஆளுகின்ற மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் அமைந்திருப்பதும் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.


அதுமட்டுமின்றி இந்த சிவலிங்கத்தை தட்டிப் பார்த்தால் வெண்கல சத்தம் எழுவதாக கூறுகிறார்கள் இதுவும் இக்கோவிலில் பிரத்தியேக சிறப்பு, இந்த சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிவனும் சக்தியும் ஸ்வர்ணபுரீஸ்வரர் ஸ்வர்ணாம்பிகை என்ற பெயரில் மக்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.மேலும் இங்கு வீற்றிருக்கும் ஸ்வர்ணாம்பிகை சிவன் இருக்கும் திசையை நோக்கி சற்று திரும்பி இருப்பதாகவும் அருகில் அமைந்திருக்கும் காகபுஜண்டர் மற்றும் அவரது மனைவி பாகுள தேவி ஆகியோரின் ஜீவசமாதியும் அம்பாளின் பார்வையில் படும்படி அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எதற்காக அம்பாள் காகபுஜண்டர் மற்றும் அவரது மனைவிவை பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள் என்றால், சிவனின் தலையில் உள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர்தான் காகபுஜண்டர் சித்தர் மேலும் இவர் நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர்.

அதுமட்டுமின்றி இந்த இடத்தில் சிவாலயம் தோன்றுவதற்கு முக்கி காரணமாக இருந்தவரும் காகபுஜண்டர்! சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படுகின்ற காகபுஜண்டர் சித்தர் இந்த இடத்தில் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தை மேற்கொண்டு அதன் பலனாக 16 முகங்களை கூடிய சிவலிங்கத்தின் தரிசனத்தை பெற்றார். மேலும் தான் தரிசனம் பெற்ற 16 முகங்களை கூடிய சிவலிங்கத்தை போன்று சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் சிவனை இங்கு வணங்க வேண்டும் என்று கூறியுள்ளார் இதனால் அப்போதைய தென் பொன் பரப்பி பகுதியில் மன்னராக கருதப்படுகின்ற வானக்கோவராயன் மன்னன் இந்த சிவலிங்கத்தை மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புடன் வடிவமைத்ததாக வரலாறு கூறுகிறது. அதுமட்டுமின்றி இந்த கோவிலின் கருவறையில் அமைந்திருக்கும் தீபம் எப்பொழுதுமே துடிப்புடன் எரிந்து கொண்டே இருக்குமாம் மேலும் இந்த துடிப்பு நாடி சுவடியின் பூரணத்துவத்தை உணர்த்துவதாகவும் கூறுகிறார்கள்.

அதோடு சொன்னபுரீஸ்வரருக்கு ராகு கால வேளையில் தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம் என பதினாறு வகை அபிஷேகங்கள் செய்யப்வருகிறதாம் அவை அனைத்துமே தானாக பிரிந்து சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகத்தை அடைந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியம் ஆவதை காணலாம் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் 16 லிங்கங்கள் இங்கு எழுந்தருளியதை உணரலாம் என்றும் கூறுகிறார்கள். அதோடு இந்த தளத்தின் சிறப்பாக ஆவணி பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் காலை 6 மணி முதல் 7:30 மணிக்குள் இந்த கோவிலில் வீற்றிருக்கும் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதை காணலாம்! மேலும் மன அமைதி வேண்டுபவர்களும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து சொர்ணபுரீஸ்வரரை தரிசித்தால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் எனவும் தேனாபிஷேகம் செய்து அந்த தேனை தினமும் உண்டு வந்தால் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தீராத நோயும் தீரும் என்றும் கூறப்படுகிறது.