குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்துனர். இதன் ஒருபகுதியாக சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் மேயர் பிரியாவின் செயல் பார்ப்போரை விமர்சனத்திற்கு தள்ளியுள்ளார். இந்த விழாவில் அரசு அதிகாரிகளை அவமானப்படுத்தும் விதமாக மேயர் பிரியா நடந்து கொண்டதாக விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான காட்சிக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சென்னையில் காமராஜர் சிலை அருகே குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதல் -அமைச்சர் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மூவர்ண கொண்ட பலூன்களை வானில் பறக்கவிட்டனர். தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்னன் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் அதிகாரிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது மேயர் பிரியா அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும்போது உடனே தனது கைபேசிக்கு வந்த அழைப்பு எடுத்து பேசியுள்ளார். பதக்கங்களை வழங்காமல் செல்போனில் அலட்சியமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் மேடையில் இருக்கும்போது போனை பேசிக்கொண்டு சான்றிதழ் வழங்கியது இணையத்தில் அந்த காணொளி வைரலாகி வருகிறது. இது அருகில் இருந்த அதிகாரிகளை மூகம் சுளிக்கும் வகையில் இருந்தது. அருகில் வீடியோ எடுப்பவர்களும் போன் தான் முக்கியமா என்று பேச்சும் எழுந்துள்ளது.
சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் மற்றும் சான்றிதழ் வாங்குவோரிடம் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மேயர் பிரியா செய்கை அவமானப்படுத்தும் விதமாக உள்ளதாக இணையத்தில் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேயர் பிரியாவுக்கு இது புதுசு இல்லை என்றும் மேயராக பிரியா பதவியேற்றது முதலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை சமூக தளத்தில் மீம்ஸ் கார்டு மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து விமர்சித்தன. அமைச்சர் கே.என்.நேரு இவரை ஒருமையில் பேசினார் என்றும், அமைச்சர் சேகர்பாபுவுக்கு இவர் குடை பிடித்தார் என்றும் வலைதளங்களில் எழுந்தன. இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள், முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் பிரியா தொங்கிச்சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சென்னை வெள்ள பாதிப்பின் போது மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்ட மக்களிடம் பேசும்போது வார்த்தையை கவனிக்காமல் அனைவருக்கும் பால் வரும் என்று கூறியது. கூட்டத்தில் உள்ள ஒரு பெண் நாங்கள் ஒன்றும் இறக்கவில்லை எங்களுக்கு பால் உற்ற என்று பதில் பேச்சும் இணையத்தில் வைரலாக மேயர் பிரியா மீது விமர்சனம் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்புள்ள மேயர் இப்படி நடந்துகொள்வதா? என வலைதளங்களில் குரல்கள் எழுந்தன.