நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் மீது தொடர்ந்து விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. விஜயகாந்த் மறைந்த போது அது குறித்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் அதன் பிறகு இலங்கை நுரொலியா மாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அந்த நாட்டு அமைச்சரை பார்த்து புகழ்ந்து பாடியது விமர்சனம் எழுந்தது. தற்போது இவரை பற்றி பிரபல நடிகர் கண்ணீர் வடித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சினிமாவில் 2011ம் ஆண்டு காலடி எடுத்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் பெரியளவில் வெற்றிப்பெறவில்லை. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அட்டகத்தி படத்தில் இரணடைவது நாயகியாக அறிமுகமானார் அதன் மூலமே இவர் சினிமாவில் அறிமுகமானேன் என்று கூறி வருகிறார். பொதுவாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் முதல் படத்தின் வெற்றியை தான் நான் அறிமுகமானேன் என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷும் இதையே சொல்லி வந்தார். அவர்களும் இவர்களும் படத்தை இயக்கிய இயக்குனர் வீரபாண்டியன் சமீபத்திய பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆரம்பத்தில் ஆட்டோவுக்கு கூட காசு இல்லாமல் அம்மாவுடன் என் ஆபிஸுக்கு அடிக்கடி வருவார் என்றும் கண்டிப்பா நீ தான்ம்மா என் படத்துல ஹீரோயின் என்றும் சொல்லி அவரையே புக் பண்ணேன். என் கூட இருக்குறவங்களே அவரு ரொம்ப குண்டா இருக்கிறது பார்த்துட்டு இவங்களையெல்லாம் ஏன் ஹீரோயின் ஆக்குறாருன்னு பின்னாடி பேசினாங்க, ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்த முனைப்பு எனக்கு பிடிச்ச நிலையில் அவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், அதன் பின் அவர் வளர்ந்து விட்ட நிலையில், என்னை அப்படியே மறந்து விட்டார் என வீரபாண்டியன் பேட்டி கொடுத்துள்ளார்.
முன்னதாக, இவர் நகை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட போது மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து கேட்ட கேள்விக்கு கையெடுத்து தன்னிடம் இது குறித்து கேட்காதீர்கள் என்று கூறியது, இணையத்தில் நெட்டிசன்கள் சார்மையாக ஐஸ்வர்யா ராஜேஷை விமர்சித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு சென்றிருந்தார் அப்போது அமைச்சர் ஜீவன் தொண்டைமான் குறித்து பொங்கல் விழாவில் யாருய்யா இவரு இவ்ளோ அழகா இருக்காரு எனவும் தமிழ்நாட்டில் இது போல ஒரு அமைச்சர் இல்லை என்றும் பேசியது. இன்யத்தில் வைரலானது அப்போதும் சமூக ஆர்வலர்கள் எதுக்கு போனமோ அதப்பத்தி பேசு அமைச்சர ஏன் கூட வச்சி பேசுற என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் வீரபாண்டியன் ஐஸ்வர்யா குறித்து பேசியது தொடர்பான விடியோக்கள் இணையத்தில் வைரலாக நீ ஒன்னும் பெரிய நடிகை இல்லையே எதுக்கு விளம்பரம் தேடி கொண்டு இருக்கிற என்றும் எப்போதும் வளர்த்தவர்களை அவமதிப்பது என்பது மிக பெரிய துரோகம் என விமரித்து வருகின்றார். தமிழ் 10 படங்களில் நடித்து முடிப்பதற்குள் பல பிரச்னையை தலையில் தூக்கி வைப்பது சரியானது அல்ல என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.