Cinema

தனுஷ் படத்திற்கு வந்த சர்ச்சை..!

Dhanush, Vela Ramamoorthy
Dhanush, Vela Ramamoorthy

பொங்கலை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் திரையில் ஒரு வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தனுஷ் மூலம் சினிமாவில் நுழைந்த சிவகார்த்திகேயன் தனுஷுக்கு போட்டியாக அயலான் படத்தை வெளியிட்டார். ஆனால் இரண்டு நடிகர்களின் படத்தையும் புறக்கணிப்பதாக தெரிவித்த்தனர் மக்கள். விஜயகாந்த் மறைவுக்கு இருவரும் வரத நிலையில் அவர்கள் மீது விமர்சனம் விழுந்தது. தற்போது கேப்டன் மில்லர் படம் தனது கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பிரபல நடிகர் கருத்தை பகிர்ந்துள்ளார்.


தமிழ் சினிமாவில் இவர் சுள்ளான், பொல்லாதவன் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் வரிசையில் முதல் ஆளாக உள்ளார். நடிப்பு திறமை மற்றும் பாடல் பாடும் திறமை கொண்டவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான வாத்தி படம் கலவையான விமர்சனம் பெற்றது. அதன் பிறகு அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் நடித்து வந்தார் தனுஷ் அதில் அவரது ஹேர் ஸ்டைலே கண்டு பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். 

ஆனால், படம் வெளியானபோது அந்த எதிர்பார்ப்பு மொத்தமும் அப்படியே தலைகீழாக மாறியது, இந்நிலையில், கேப்டன் மில்லர் படம் கதை குறித்து விமர்சனம் வந்தது. எழுத்தாளர் வேல ராமமூர்த்தியி தனது கதையை திருட்டிவிட்டதாக கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது பட்டத்து யானை நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக கேள்விப்பட்டேன். நான் எழுதிய பட்டத்து யானை நாவலின் ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பான் என்பது தான் கதை. அதனை கொஞ்சம் மாற்றி கேப்டன் மில்லர் படமாக எடுத்துள்ளனர்.

இதெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா, பட்டத்து யானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் அல்லது அனுமதி வாங்கியிருக்கலாம். நான் எழுதுவதெல்லாம் எனது ஊரின், எனது மக்களின் வாழ்வியல். இதனை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திருடிவிடுகின்றனர். கேப்டன் மில்லர் மட்டுமல்ல இன்னும் பல படங்களிலும் எனது கதைகள், சீன்கள் திருடப்பட்டுள்ளன. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் எனது கதையை கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர் அதுவும் எனக்கு மிக பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. புகார் தந்தாலும்.. வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள்.ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என மிக காட்டமாக விமர்சித்துள்ளார் வேல ராமமூர்த்தி.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை கேப்டன் மில்லர் படக்குழுவோ அல்லது இயக்குனர் மாதேஷ் வரனோ அல்லது நடிகர் தனுஷ் என்று யாரும் விளக்கம் கொடுக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சினிமாவில் இது ஒன்றும் புதுசு இல்லை பல படத்திற்கு இப்படி தான் பேசப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று கொண்டு நடப்பதை பாருங்கள் என்று சினிமா துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். படம் வெளியாகிவிட்டது இதற்கு மேல் போரடி ஒரு புரோஜனமும் இல்லை என்றும் அந்த சுட்ட கதையாக இருந்தாலும் படத்தை எடுக்க தெரியவில்லை என்று விமர்சனம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.