24 special

சரியாக கணித்த அண்ணாமலை...! அஸ்திவாரமே ஆட்டம் காணும் திமுக கூட்டணி...!

annamalai , mkstalin
annamalai , mkstalin

கடந்த பத்து நாட்கள் முன்பு அதிமுக பாஜக கூட்டணி பிரிவுதான் தமிழக அரசியலில் பிரதானமாக பேசப்பட்டது, அப்பொழுது அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி இல்லாமல் முடிவெடுக்கிறார்! தமிழகத்தில் பெருவாரியான வாக்கு சதவீதத்தை கையில் வைத்திருக்கும் கட்சியும், பெருவாரியான உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியுமான அதிமுகவின் கூட்டணியே முறியும் நிலைக்கு வருவதற்கு அண்ணாமலையே காரணம்! அண்ணாமலை தவறிழைத்துவிட்டார்! இது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது! என பல்வேறு விதமான கருத்துக்களை எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர். 


குறிப்பாக தமிழகத்தில் அரசியல் விமர்சகர்கள், மூத்த அரசியல்வாதிகள் என சொல்லப்படுபவர்கள் கூட 'அண்ணாமலை ஏன் இப்படி செய்கிறார்?' என பேசினார்கள் ஆனால் அப்பொழுதே அண்ணாமலையின் இந்த முடிவு பற்றி கமலாலய வட்டாரங்களில் விசாரித்த பொழுது 'அண்ணாமலை சரியாகத்தான் செய்கிறார், பொறுத்திருந்து பாருங்கள்' என கூறினார்கள். 

இப்பொழுது அவர்கள் கூறியது போலவே அண்ணாமலை கணித்து இறங்கிய விவகாரம் மற்றும் எடுத்த முடிவு சரியாகும் விதமாக எதிர் முகாமான திமுக கூட்டணியில் மெல்ல விரிசல் விழுந்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணி பிரிந்ததற்கு பிறகு அதிமுக தனித்து நிற்கிறது, தற்பொழுது இதுவரை அதிமுகவுடன் எந்த கட்சியும் சேருவதாக அறிவிக்கவில்லை. ஆனால் ஒரு சில கட்சிகள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என சில அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிமுகவுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும், திமுகவினர் இந்த முறை குறைவான தொகுதிகள் அல்லது சின்னம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில் அதிமுகவுடன் ஒரு தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் நான் கூட்டணிக்கு சென்று விடலாம் என கணக்கு போட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன. 

அதனை தொடர்ந்து தற்பொழுது காங்கிரஸ் திமுக கூட்டணியான காங்கிரசும் மெல்ல திமுக கூட்டணியில் இருந்துகொண்டு தனது நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதாரணி இது தொடர்பாக கடந்த முறை தேர்தலில் திமுகவிடம் பெறப்பட்ட தொகுதியிலே காட்டிலும் இந்த முறை எண்ணிக்கையில் குறைத்து வாங்க மாட்டோம் என்று முடிவில் இருக்கிறாராம், அதுபோலவே மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் இந்த முடிவில் இருப்பதாகவும் அதுமட்டுமல்லாமல் இந்த முறை கரூர், விருதுநகர், ஆரணி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் மறுபடியும் திமுகவிடம் கேட்டு வாங்க திட்டமிட்டு வருவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் கடந்த முறை 9 சீட்டுகளை திமுக தரப்பிலிருந்து காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது, அதேபோன்று இந்த முறை 9 சீட்டு என்ற எண்ணிக்கையை விட அதிகமாக காங்கிரஸ் தரப்பு 10 சீட்டு கேட்க வேண்டும் என காங்கிரஸ் முடிவாக இருப்பதாகவும் அதைத்தான் டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை குறிப்பாக ராகுல் விரும்புவார் எனும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். பத்து தொகுதிக்கும் குறைவாக திமுக கூட்டணியில் வாங்கினால் அது நன்றாக இருக்காது எனவும் அப்படியே திமுக கொடுக்காத பட்சத்தில் கூட்டணி மாற்றுவதற்கு காங்கிரஸ் தயங்காது எனவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.. 

இப்படி அண்ணாமலை அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து எடுத்த முடிவு பாஜக தனியாக நின்றாலும் பரவாயில்லை என முடிவு எடுத்ததன் காரணமாக தற்பொழுது அதிமுக தனியாக இருக்கும் சூழலில் திமுகவின் கூட்டணி கட்சிகள் மெதுவாக திமுகவில் முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளன என தெரிகிறது. இதன் காரணமாகவே திமுக தனது கூட்டணி கட்சிகளில் சிலவற்ற இழக்க நேரிடும் இதுவே திமுகவின் கூட்டணி பலவீனம் அடைவதற்கு வழிவகுக்கும் எப்படி பார்த்தாலும் வரும் தேர்தல் பாஜகவிற்கு லாபம் தான் என்வும்  அண்ணாமலை எடுத்த முடிவு இன்று வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.