இனி வரும் காலங்கள் அனைத்தும் மழைக்காலங்கள் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மழைநீர் தேங்காத வண்ணம் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்காலம் என்றாலே சென்னையில் மழை நீர் ஆறு போல் ஓடுவதும் வெள்ளம் போல் தேங்கி இருக்கிற காட்சியும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் செய்திகளாக வெளியாகிக் கொண்டிருக்கும்.
சாதாரண நாட்களிலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து என்பது சற்று அதிகமான நெரிசலாக காணப்படும். இந்த நிலையில் மழை காலம் வந்த பிறகு மழை வெள்ளத்தோடு போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகி சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இடத்திற்கு செல்ல வேண்டியது பல மணி நேரமாகிவிடும். கடந்த மழைக்காலத்தின் பொழுது சென்னையில் முழுவதும் மழை காலத்திற்கான முன்னேற்பாடுகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது ஆனால் சென்னை மேயர் பிரியா மழைக்காலத்தில் மக்கள் இங்கு ஒவ்வொரு நாளும் சிரமப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் வெளிநாடு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு திரும்பியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த வெளிநாட்டு பயணம் தேவையா என்ற கேள்வி மக்கள் மத்தியிலும், இவரை யார் இப்பொழுது வெளிநாடு பயணங்களை மேற்கொள்ள சொன்னது என்ற கோபக்கடுப்புகள் அறிவாலய தலைமையிலும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதற்குப் பிறகு மேயர் பிரியாவால் ஏற்பட்ட சர்ச்சைகள் திமுக தலைமைக்கு அதிக கோபத்தை ஏற்படுத்திய காரணத்தினால் சில காலங்களுக்கு அமைதியாக இருக்கும் படி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் போன்ற மாதங்கள் மழைக்காலம் என்பதால் சென்னை முழுவதும் மழைக்காலத்திற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
அந்த நடவடிக்கைகள் அனைத்தும் எப்படி நடந்து கொண்டு வருகிறது என்பதை ஆய்வு செய்வதை பொதுவாக சென்னை மேயர் பிரியா தான் ஆய்வுகளை மேற்கொள்வார். ஆனால் இந்த முறை திமுகவின் முக்கிய அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கி மேற்கொண்டு வருகிறார்.
அதாவது கடந்த வாரங்களில் பெய்த மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக இருந்தது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகிறது. இதனால் மழைக்காலத்திற்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் முறையாக இல்லை என்ற புகாரும் தற்போது அதிகரித்துள்ளதால் இனிய பிரியாவை நம்பி வேலையாகாது தேர்தல் வரும் சமயத்தில் இது போன்ற அதிருப்திகள் பெரும் பின்னடைவைதான் நமக்கு ஏற்படுத்தும் என்று கருத்தில் கொண்டு தற்பொழுது தேர்தல் வேலைகளை திமுகவின் தரப்பில் மேற்கொண்டு வரும் விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே முன்னேற்பாடுகள் முறையாக நடைபெற்று வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு களத்தில் இறங்கி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது
அதன்படி சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் நதியின் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். சில காலங்களாகவே கள ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இருந்த அமைச்சர் உதயநிதி தற்போது தேர்தலை கருத்தில் கொண்டும் மேயர் பிரியாவை நடவடிக்கைகள் உள்ள குறைகளை மக்கள் காணாமல் இருப்பதற்காகவும் இந்த திடீர் ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகிறார் என்றும் அறிவாலய வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவிற்கு பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காக மேயர் பிரியாவை நம்பாமல் இவரே நேரடியாக களத்தில் இறங்கியது வேறு பல்வேறு விமர்சங்களை கிளப்பியுள்ளது.. மேலும் மேயர் பிரியா இந்த ஆய்வு குறித்தும் எதுவும் பத்திரிகைகளுக்கு கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது...