தளபதியின் விஜய் படத்திற்கு சென்சார் கட் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் வாய்ஸ் இல்லாமல் திரையில் பார்க்க வேண்டும் இதனால் ரசிகர்கள் சோகத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழ் சினிமாவே பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் படம் விஜய் நடித்த "லியோ" இந்த படத்தில் திரை பட்டாளங்கள் பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரின் தயாரித்துள்ள படம் லியோ இம்மாதம் 19ம் தேதி திரைக்கு வரவுள்ளது. லோகேஷ் இயக்கிய படங்கள் எல்லாம் சண்டைக்காட்சிகள் மற்றும் ரத காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அப்படி தான் இந்த லியோ படத்தின் ட்ரைலரிலும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. லோகேஷ் இயக்கிய படத்தில் இதுவரை ரொமாண்டிக் காட்சிகள் அமைக்கப்படவில்லை காரணம், லோகேஷ் கனகராஜுக்கு காதல் காட்சிகள் போன்ற கதையை முழுமையாக எடுக்க வராதாம். இதனால தான் அவர் எல்லா படத்திலும் காதலிக்கும் பெண்களை வில்லன் கொலை செய்வது போல் வைத்திருக்கிறார். அப்படி லியோ படத்திலும் எதாவது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ-வில் விஜய்க்கு மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார் படத்தை பார்த்தால் தான் தெரியும் அதே போல கொலையா? இல்லை மற்ற படங்களை போலவே ஹீரோயின், ஹீரோவுக்கு மோட்டிவேஷன் போலவே கதைக்களம் அமைத்திற்குமா என்று 19ம் தேதி தெரியவரும்.இந்நிலையில் லியோ படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடினர். இந்த ட்ரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போல் அமைத்திருந்தது, குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இந்த காதசியை கண்டு முகம் சுளிக்க வைத்திருந்தது. இப்படி விஜய் பேசியதற்கு பல நட்சத்திரங்கள் தப்பு இல்லை என்று ஆதரவு கொடுத்திருந்தனர். மறுதரப்பு சமூக வலைத்தளத்தில் கடுமையாக சாடி இருந்தனர். பெண்களை இழிவு படுத்தும் வகையில் அமைத்திருந்தது இந்த காட்சி என சமூக தளத்தில் கருத்துக்களை முன் வைத்தனர். தொடர்ந்து இந்து முன்னணி கழகம் சார்பில் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முன் உத்தரமானாக இருப்பவர் விஜய் இப்படி பேசியது தவறானது என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
தணிக்கை குழு விரைந்து நடவடிக்கை எடுக்க வேணும் என்று குறிப்பிட்டிருந்தனர்.தற்போது லியோ படத்தின் புகை மற்றும் போதைப்பொருட்கள், ரத்தம் தெறிக்கும், ஆபாச வார்த்தைகள் என 13 கட்டுகள் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ரசிகர்கள் ட்ரைலரை பார்த்து விட்டு திரையில் இப்படியான காட்சிகளை பார்க்கும் போது சில்லறையை சிதற விடலாம் என்ற பிளான் போட்டதெல்லாம் வீணாகிவிட்டது என்று வருத்தத்தில் உள்ளனர். இந்த சென்சார் கட் திரைக்கு மட்டும் தான் என்றும் ஒட்டிடி தளத்தில் இதையெல்லாம் கேட் பண்ண மாட்டார்கள் அதி நாங்கள் பார்த்துகிறோம் என்று மனதை தேத்தி வருகின்றனர். இருப்பினும் 19ம் தேதி வெளியாகும் முதல் காட்சியில் இந்த வார்த்தைகள் கட் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.