தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் வீரமரணம் அடைந்த மதுரையை சேர்ந்த இந்திய இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையம் வந்து அடைந்தனர், அப்போது பழனிவேல் தியாகராஜன் அருகில் இருந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணனை கடுமையாக சாடி என்ன இப்போ என மல்லுக்கு நின்ற காட்சிகள் வெளியானது.
இதையடுத்து பாஜகவினர் பழனிவேல் தியாகராஜன் சென்ற வாகனத்தை வழிமறுத்து தாக்கினர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்டது, இந்த சூழலில் இரண்டு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்து வரும் சூழலில் திராவிட கழகத்தலைவர் வீரமணி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அதில்,
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்மீது தாக்குதல் கண்டனத்திற்குரியது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்பது மிகவும் சோகமானதாகும்.
அவர் உடல் விமானம்மூலம் மதுரை வந்து சேர்ந்த நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்திவிட்டு, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் நடந்துகொண்ட அநாகரிகமான முறை கண்டிக்கத்தக்கது. அமைச்சரின் கார்மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.
பி.ஜே.பி. கூறும் தார்மீகப் பண்பு இதுதான் என்றால், இவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் காணவேண்டும்! வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அண்மைக்காலமாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸின் பேச்சுகளும், நடப்புகளும் எல்லையை மீறிக் கொண்டுள்ளன. இதற்கொரு முடிவு காணப்படவேண்டும். இல்லையெனில், வெளிமாநிலங்களில் அவர்கள் கையாளும் வன்முறைக் கலாச்சாரத்தின்மூலம் எதையும் சாதித்துவிடலாம் என்ற தைரியம் வந்துவிடும், எச்சரிக்கை என குறிப்பிட்டுள்ளார் வீரமணி.
ஒட்டுமொத்தமாக வீரமணியின் அறிக்கை பாஜக தமிழகத்தில் வளர்ந்து விடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாகதான் பார்க்க படுகிறது.