24 special

ராணுவத்தை கொண்டு தேரை நாங்கள் இழுக்கட்டுமா?....தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி!

mk stalin
mk stalin

மாநில அரசால் தேரை ஓடவைக்க முடியவில்லை என்றால்?...மத்திய அரசு உதவியுடன் தேரை ஒட்டாவா?நீதிபதி சரமாரி கேள்வி!சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில். அங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும். 2006ம் ஆண்டுக்கு பிறகு இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெறவில்லை. ஜாதி பிரச்சனை காரணமாக இந்த கோவிலில் தேரோட்டத்திற்கு தடைபட்டது. 


இதையடுத்து கோவில் திருப்பணி காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது திருப்பணி முடிந்து 2012ம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு நிச்சயம் தேரோட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தேரோட்டத் திருவிழா கொடியேற்றம் ஜூன் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன் பின் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தி தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டதேவி கோவிலில் கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்காததால் தேர் மிகவும் பழுதாகியுள்ளது. புதிய தேர் செய்ய அரசு ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கியது. அதன் பிறகும் அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விழா அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கண்டதேவி கோவில் தேரோட்டத்தின் போது தேரை இழுக்க தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். கடந்த முறை தேரின் போது அங்கு தாழ்த்தப்பட்ட மக்களை 10 பேரை மட்டுமே புகைப்படம் எடுப்பதற்காக அனுமதித்தனர்.

அதன் பின்னர் அவர்களையும் வெளியேற்றினர் என்று சொல்லப்பட்டது. அப்போது, ஏற்பட்ட இரு தரப்பு பிரச்சனை காரணமாக தென் மாவட்டங்களில் பதட்டம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது. கண்டதேவி கோவில் திருவிழா குறித்து நீதிபதி புகழேந்தி மாநில அரசால் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால் மத்திய துணை ராணுவத்தின் உதவியுடன் தேரை நான் ஓட வைக்கவா? என கேள்வி எழுப்பியதோடு, பல கோடி ரூபாய் செலவில் தேரை செய்தது தெருவில் நிறுத்தி வைக்கவா? என கடுமையாக கேள்வி எழுப்பினார்.

வரும் 17ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.இன்று ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தேர் தயாராக இருக்கிறது. ஆனால் அங்கு பல்வேறு பிரிவினர்கள் இடையே பிரச்சனைகள் இருப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 'சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னமும் பிரிவு இருக்கிறது ஒற்றுமை ஏற்படவில்லை இல்லையென்றால் எப்படி? அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என்றார். 2019ம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டு பலமுறை நீதிபதிகள் விசாரித்து தேரை ஓட்டுவது குறித்து விளக்கம கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.