தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் சினிமாவை தாண்டி வெள்ளித்திரையிலும் தன் வெற்றியை பதித்தவர் சிவகுமார். இவரின் இரு மகன்களும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். அதில் நடிகர் சூர்யாவின் வளர்ச்சி என்பது அவரது தந்தையாலே எதிர்பார்க்காத ஒன்று! நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் அவை அனைத்தும் பெருமளவிலான வெற்றியை சூர்யாவிற்கு கொடுக்கவில்லை, ஆனால் 2001 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு சூர்யாவின் திரை வாழ்க்கையிலேயே காக்க காக்க திரைப்படம் ஒரு முக்கிய திருப்ப முனையாகவும் சூர்யாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அது பார்க்கப்பட்டது. இதற்குப் பிறகு ஆயுத எழுத்து, மாயாவி, கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் போன்ற தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். மேலும் ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று ஆகிய இரு படங்களும் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்கள் அதுமட்டுமின்றி எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படமே சூர்யாவின் கடைசி திரைப்படமாக இருந்துள்ளது. இதற்கு பிறகு சூர்யாவின் எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகாமல் உள்ளது.
அதோடு விரைவில் சூர்யாவின் நடிப்பில் கங்குவா திரைப்படம் திரையரங்களில் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் சினிமாவின் எப்படி ஒரு வளர்ச்சி அடைந்த நடிகராக சூர்யா பார்க்கப்படுகிறாரோ அதே சமயத்தில் அரசியல் வட்டாரங்களிலும் நடிகர் சூர்யா பெருமளவில் பேசுபொருளாக இருந்து வருகிறார். ஏனென்றால், சூர்யாவின் பெரும்பாலான கருத்துக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு கருத்துக்களாக இருந்துள்ளது குறிப்பாக நீட் எதிர்ப்பு மற்றும் ஹிந்தி மறுப்பு போன்ற இரண்டு விவகாரங்களில் சூர்யாவின் நடிப்பும் சரி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளும் சரி பொதுவெளியில் கூறிய கருத்துக்களும் சரி அனைத்துமே திமுகவின் கொள்கைகளை பரப்புவதாக இருந்தது. இவற்றிற்கு சூர்யா ஆரம்பத்தில் பாராட்டுகளை பெற்றாலும் தற்போது பெருமளவிலான எதிர்ப்பை பெற்ற வருகிறார். ஏனென்றால் திமுக எதிர்கட்சியாக இருந்தபொழுது மக்கள் சந்தித்த பிரச்சனைகளை விட தற்போது அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் இவற்றை பல செய்தித்தாள்களும் கடுமையாக தெரிவித்து வருகிற நிலையில் அதற்கான எந்த ஒரு சமூக குரலையும் சூரியக் கொடுக்கவில்லை இதன் மூலமே அவர் திமுகவின் ஒரு சாயல்தான் என்பது அரசியல் வட்டாரங்களில் விமர்சிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அன்று திமுகவின் ஆதரவை கடைபிடித்த சூர்யா தற்போது திமுக எதிர்த்த பல செயல்களையே செய்து வருகிறார் குறிப்பாக ஹிந்தி எதிர்ப்பு மற்றும் ஹிந்தி திணிப்பு போன்றவை தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதை வலுக்கட்டாயமாக கூறி வந்த சூர்யா தற்போது தனது குடும்பத்தோடு மும்பையில் குடி ஏறினார் என்று கூறப்பட்டது அதுவும் ஜோதிகாவுடன் சூர்யா மும்பையில் உள்ள 70 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர உள்ளார் என்று பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் தொடர்ந்து நடந்த கொலைகளுக்கு சமூகத்தினரின் குரலாக சூர்யா குரல் கொடுக்காமல் இருந்தது அதோடு அம்பானியின் மகன் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்ததை என அனைத்தும் சூர்யாவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கங்குவா திரைப்படத்திற்கு ஏதேனும் இந்த பின்னடைவுகளால் தோல்வி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல புதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் சூர்யா தனது குடும்பத்தினரோடு குடியேறி இருப்பது அரசியல் வட்டாரம் முழுவதும் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்காகத்தான் அன்று தனது மூச்சு முட்ட ஹிந்தி திணிப்பை எதிர்த்தாரா இதன் மூலம் என்ன கூற வருகிறார் சூர்யா, அவர்கள் கூறுவதை நாம் கேட்டு வேறு எதையும் கற்றுக் கொள்ளக்கூடாது ஆனால் அவர்கள் மட்டும் கற்றுக் கொண்டு முன்னேறி செல்வார்களா என்று விமர்சனங்கள் அள்ளி வீசப்படுகிறது.மேலும் இதுகுறித்து விசாரித்த சமயம் இனி தமிழ்நாட்டில் நம்மால் சரிவர இயங்கமுடியாது இங்கே படங்களும் அதிக அளவில் ஓடவில்லை, இனி மும்பையில் பிசினெஸ், திரைப்படங்கள் விநியோகம் என வாழ்ந்துவிடலாம் என சூர்யா தரப்பு முடிவெடுத்திருப்பதாக கூறுகின்றனர் சில விவரமறிந்தவர்கள்....