தமிழகத்தில் வளர்ச்சி திட்டத்திற்காக வெளிநாட்டு பயணங்களை வருடா வருடம் திமுக தமிழகத்தில் ஆட்சி ஏற்றதிலிருந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவுகளை மேம்படுத்துவதற்காக துபாய் மற்றும் அபிதாவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தை மேற்கொண்டு அதன் மூலம் 2600 கோடி முதலீடுகளை ஈட்டி உள்ளதாகவும், இதன் அடிப்படையில் 9700 தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தொடர்ந்து திமுக அரசு தெரிவித்து வந்தது.
இந்த பையனும் மேற்கொண்டு ஒரு வருடம் ஆன நிலையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மு க ஸ்டாலின் அரசு முறையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணமும் தமிழ்நாட்டிற்கு தொழில் சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதற்காக மேற்கொண்ட பயணம் என்று திமுக சார்பில் கூறப்பட்டு வந்தது. ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயணம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்திற்கு 3233 கோடி ரூபாய் அளவில் முதலீடு கிடைத்ததாகவும், இந்த முதலிடை பயன்படுத்தி ஐந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை கிடைக்கும் வகையில் செய்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஆனால் தொடர்ச்சியாக இவ்வளவு முதலீடுகள் தரப்பட்டதா இதன் மூலம் யாருக்காவது வேலை வாய்ப்புகள் கிடைத்ததா?? என்பது குறித்த செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் மு க ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக தமிழகத்தில் பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் மு க ஸ்டாலின் அமெரிக்காவிற்கு வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்று தமிழகத்திற்காக முதலீடுகளை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகும் நேரத்தில் பயணத்தின் போது google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் சுந்தர் பிச்சை அவர்களையும் முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டுகளுக்கு சென்று முதலீடு ஈட்டி வந்ததாக திமுக சார்பில் கூறி வந்ததற்கு பல எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து வழிகாட்டி வந்தது.
இந்த நிலையில் மீண்டும் தமிழக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாக வெளியாகும் செய்திகளைத் தொடர்ந்து ஏற்கனவே அரசியல் விமர்சகராக இருந்த சவுக்கு சங்கர் இப்படி முதல்வர் அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் செல்வதற்கு காரணம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தான் என்று கூறியிருந்தார். மேலும் முதல்வருக்கு உடலில் நடுக்கம் ஏற்படும் நோய் உள்ளது என்றும், அதற்காக பல ரகசியம் மருந்துகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறார் அதனால் தான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வருகிறார் என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த வியாதிக்கு ஸ்விம்மிங் பூல் உள்ள இடத்தில் நடக்க வேண்டும் என்பதற்காக வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொண்டார் என்று தகவல் வெளியாகியது. இந்த நேரத்தில் ஏற்கனவே மூன்று முறை வெளிநாட்டிற்கு சென்று ஒரு முதலீட்டுகளையும் கொண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்காவிற்கு செல்கிறார். இந்த முறையாவது முதலீடை கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் கேள்வியாக இருந்து வருவதோடு ஏற்கனவே சவுக்கு சங்கர் கூறியது போல சிகிச்சைக்காக தான் மு க ஸ்டாலின் இப்படி வெளிநாட்டிற்கு சென்று வருகிறாரா என்ற சந்தேகமும் எழுந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்...