கடந்த புதன்கிழமையில் ஒடிசா மதுபான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். மொத்தம் 150 அலுவலர்கள் இந்த சோதனைகள் ஈடுபட்டு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது, அதிலும் இந்த சோதனையானது ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி மக்களவை எம்பி தீரஜ் பிரசாத் சாகுவிற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்றது அம்மாநிலத்தில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு 10 பீரோக்களில் கணக்கில் வராத 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர். இப்படி இவ்வளவு அளவிலான பணத்தை ரொக்கமாக ஓரிடத்திலிருந்து அதுவும் ஒருவர் தொடர்புடைய இடத்தில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியது இதுவே முதல் முறை என்றும் ஐ டி தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில், இது ஒரு வங்கியுடைய பணப் பெட்டகம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான தீரஜ் சாகு என்பவர், ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ₹300 கோடி பண மூட்டை. வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என குறிப்பிட்டு பீரோக்களில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ காட்சியையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் யார் இந்த காங்கிரஸ் எம்பி என்று பின்னணியை விசாரித்த பொழுது காங்கிரஸ் கட்சிக்கும் தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தீரஜ் சாகுவின் குடும்பத்திற்கும் நீண்ட கால தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விசாரித்ததில் தீரஜ்ஜிற்கு ஐந்து சகோதரர்கள் இருந்துள்ளனர் 5 பேரில் இவரை உட்பட நான்கு பேரும் அரசியலில் நுழைந்தனர். அதில் ஷிவ் பிரசாத் சாஹீ சகோதரர் மற்றும் சகோதரரான நந்த்லால் சாகுவும் மறைந்தவர். அடுத்தாக சகோதரர் கோபால் சாகு காங்கிரஸ் சார்பில் 2019 ஹரிசாரிபாக்கில் போட்டியிட்டவர் இருப்பினும் அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தவர். இப்படி தீரஜ் சாகுவின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் அரசியலில் இருந்துள்ளனர்.இதற்கு பிறகு 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடை தேர்தலில் மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2010 ஜூலையில் நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2018 மூன்றாவது முறையாக ராஜசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார். இப்படி அரசியலையும் தாண்டி அதிக செல்வாக்கை பெற்ற தீரஜ் சாகுவின் குடும்பம் முதன்மை வணிகமாக மதுபான தொழிலை கொண்டிருந்தது.
இதன் மூலம் தீரன் சாகு இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மீட்பு மனுவில் சொத்து மதிப்பு 34 கோடிக்கும் மேல், அசையும் சொத்துக்கள் ரூபாய் 20.4 கோடியும் அசையா சொத்துக்கள் ரூபாய் 14. 43 கோடியும், மேலும் ஒரு ரேஞ்ச் ரோவர், ஒரு பிஎம்டபிள்யூ ஒரு பார்சூனர் மற்றும் ஒரு பேஜரோ என மொத்த நான்கு கார்களையும் ஆண்டு வருமானம் சுமார் ஒரு கோடி ரூபாய்யையும் கொங்குள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது இதனைத் தவிர இவரது மனைவி தரப்பில் ரூபாய் 94.5 லட்சம் மதிப்புள்ள 3.10 தங்கமும், 26.16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் சாகுவிடமும் இருந்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள நோட்டு கட்டுகள் என்பது மிகவும் அதிகம் என்றும் அந்த நோட்டு கட்டுகளை எண்ணுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் அடிக்கடி பழுதாகி உள்ளது! அந்த அளவிற்கு நோட்டு கட்டுகள் நிரம்பி வழிந்து உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் முழுவீச்சில் இறங்குவார்கள் எனவும் தீரஜ் பிரசாத் சாகு இடத்தில் கைப்பற்றப்பட்டதுபோல் தமிழகத்திலும் சில முக்கிய புள்ளிகளை அமலாக்கத்துறை தூக்கலாம் எனவும் வேறு பரபரப்பாக பேசப்படுகிறது..