24 special

ஆங்கிலேயர் அடையாளத்தை எல்லாம் மாத்தணும்.....! அமித்ஷா இறங்கி அடித்த ஒரே அடி....!

amitshah
amitshah

பாஜக ஆட்சி காலத்தில் இந்தியா தனது ஆங்கிலேய ஆதிக்க அடையாளங்களை மறந்து பண்டைய பாரம்பரியமான பாரதமாக திகழவேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது பாஜகவிற்கு, அதற்க்கு பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் அதனை ஒவ்வொன்றாக பாஜக நிறைவேற்றி வருகிறது.அதன்படி இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் என்று தான் சட்டம் அழைக்கப்பட்டு வந்தது இனி இந்திய தண்டனைச் சட்டம் கிடையாது அதற்கு பதிலாக புதிய திருத்தங்களுடன் மூன்று மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நடக்க இருக்கும் குளிர்கால கூட்ட தொடரில் நாடாளுமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யவிருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டத்தை மொத்தமாக மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களை வாபஸ் பெற்றது வாபஸ் பெற்று அடுத்தபடியாக அதில் சில திருத்தங்கள் மற்றும் தற்போதைய சூழலுக்கு தகுந்தபடி மாற்றங்களை செய்து என்று புதிதாக தாக்கல் செய்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 


இந்தியாவில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் கடைபிடிக்கப்பட்டு வருவது இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவை இனி புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும். அதன்படி இனி இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரசா சன்ஹிதா, இந்திய சாட்சிய சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாட்ஷயா ஆகியவை இனி கடைப்பிடிக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சட்டத்தின் படி தான் இனி ஒரு நபர் கைது செய்யப்பட்டாலோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டனோ, அவர் மீது புகார் பதியப்பட்டாலும் அனைத்தும் இந்த சட்டத்தின் படி தான் இருக்கும் இதன் காரணமாக இந்திய தண்டனைச் சட்டம் என்பது இனி வழக்கத்தில் இல்லாமல் செய்து விடும்.முக்கியமாக இந்திய தண்டனைச் சட்டம் இந்தியா முழுக்க போலீசார் பயன்படுத்தப்படும் சட்டமாக இருக்கையில் இனி ஐ பி சி குற்றப்பிரிவு என்ற சொல்லே இருக்காது எனவும் அதோடு மட்டுமல்லாமல் இனி அந்த சட்டத்தில் இருக்கும் பல கூறுகளும் மாற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து அடையாளங்களும் முற்றிலுமாக மாற்றப்பட்டு இந்திய தேசம் இனி பாரத தேசமாக மாறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதில் பெயர்களையும் சில திருத்தங்களையும் மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இனி இன்று முதல் அது அமலுக்கு வரும் நாட்டில் பாஜகவிற்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் இதற்கு பதிலாக பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் பரவாயில்லை ஆங்கிலேயர் அடிமைத்தனத்தை ஒழித்த பாரத நாடு ஆங்கிலேயர் கொண்டு வந்த விதிமுறைகளையும் ஒடுக்கி நம் பாரத தேசத்திற்கு தேவையான விதிமுறைகள் தான் இனி நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இடதுசாரிகள் பல இதற்காக எதிர்ப்புகளை கட்டிவந்தாலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக இருந்து பத்தாண்டுகள் பாஜக ஆட்சி நிறைவு பெற்று வரும் சூழலில் நிறைவேற்ற இருப்பது வரவேற்கத்தக்கது என வலதுசாரிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.